அடிமேல் அடி by S. Sivatharsi

மாலை மங்கும் வேலையில் மணற்தரையில் கடலை நோக்கி தன் வாழ்வில் வசந்தம் வீசாதா என்ற ஏக்கத்தடன் காத்து நின்றாள் வாசுகி. தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த பொற்காலத்தை மெதுவாக எண்ணி மனதளவில் வறுந்தி அழுதாள். வானத்தில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவில் இருக்கும் நிலவு போல என்னைச் சூழ்ந்த சொந்தங்கள் வந்து சேராதா மீண்டும் என்றஎ ண்ணத்தோடு தன் வாழ்வின் இனிமையான தருணங்களை மீட்டிப்பார்க்கின்றாள்.

என்னுடைய அழகான குடும்பத்திலே அம்மா, அப்பா, என்று இருக்க அவர்களுக்கு செல்லக் குழந்தையாக நான் பிறந்தேன். நான் ஒரேயொரு குழந்தையாகப் பிறந்தமையால் என்னை கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். எனக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்துதந்தனர். நானும் அவர்களுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். என்னை அவர்கள் சந்தோஷமாக வளர்ந்து வந்தாலும் கூட உலகத்திலே நடக்கின்ற நன்மை, தீமைகளைப் பற்றிக் கூறி என்னையும் ஒருசராசரி பிள்ளையாகவே வளர்ந்தனர்.

எனது பெற்றோருடன் வாழ்ந்த நாட்களில் பல இடங்களுக்கு எல்லாம் சென்று அங்கு உல்லாசமாகப் பொழுதைக் கழித்த நாட்களை நினைத்துப் பார்க்கும் வேலையிலே என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிகின்றது. இவ்வாறு நான் மனதிலே பல இரைச்சல்களுடனும் மனவேதனைகளுடன் உன் முன்னே இருக்கின்றேன். நீயும் இவ்வாறுதானே இருக்கின்றாய். குhலமெல்லாம் தினமும் இரைக்கின்றாயே கடலே உனக்கும் வாழ்கையில் பிரச்சனைகள் உண்டா? நீயும் என்னைப் போன்று குடும்பத்தை இழந்தாயா? என்று குமுறலுடன் கடலை நோக்கி வினா எழும்பிக் கொண்டிருக்கின்றாள். வாசுகி.

இவள் இவ்வாறு புலம்பிக் கொண்டிருக்கும் போது இவளுடைய முதுகும் புறத்தை யாரோ தொடுவது போல தோன்றியது. அப்பொழுது அவள் திடுக்கிடுகின்றாள். இவனுடைய நிலமையைப் போலவே தனிமையுடன் ஒரு தாய், தந்தை சோகங்களுடன் இவளை நெருங்குகின்றனர்.

தனிமையிலே நின்ற வாசுகிக்குஅப்பொழுதுதான் ஒரு உறவு கிடைப்பது போன்று ஒரு எண்ணம் தோன்றுகிறது. அவர்களும் ஏதோ ஒன்றைத் தொலைத்து ஏங்கித் தவிப்பது இவளுக்குத் தெரிந்தது. அந்த சமயம் வாசுகியின் தனிமையும் அவர்களுக்கு விளங்கியது.
இவர்கள் முன் பின் தெரியாதவர்களாக இருந்தாலும் இவர்களுக்குள் இருக்கின்ற ஏதோ ஒரு தொடர்பு காரனமாக அந்த மாலை மயக்கம் வேளையில் இவர்கள் உறவாடத் தொடங்குகின்றனர். உறவாடும் வேலையில் தன்னுடைய வாழ்கையில் நடந்த சோகத்தை இவர்களுக்குச் சொல்லத் தொடங்குகின்றாள வாசுகி.

அன்றொருநாள் என்னுடைய வீட்டிலேநான் எனது பெற்றோருடன் இருந்தேன். எங்களுடைய வீடு கிழகக்கு மாகாணத்திலுள்ள ஒரு சிறியகிராமம். அங்கு வயல் வெளிகளும் கடற்கரைகளும் தான் அதிகம். கடற்கரைகளுக்கு சுற்று வாவிற்காகப் பலரும் வந்து செல்வார்கள். எங்களுடைய அயலவர்களும் சணிக்கிழமைகளில் இதிலும் குறிப்பாக வார இறுதிநாட்களில் தான் அதிகமாகச் சென்று தமது ஓய்வுப் பொழுதைக் கழிப்பார்கள். இந்தக் கடற்கரயை நம்பித் தான் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர். ஒருநாள் சனிக்கிழமை எமது குடும்பத்துடன் சொந்த பந்தங்களுடனும் அக் கடற்கரைக்குச் சென்றோம். அங்கு சென்றுஎல்லோரும் சிரியவர் பெரியவர் வித்தியாசமின்றி மணல் வீடுகள் அமைத்து கடற்கரைக் காட்சியைப் பார்த்து இரசித்துகொண்டு இருந்தோம்.

அந்த வேலையிலே கடற்கரையில் ஒருபெரிய பறன் அமைக்கப்பட்டிருந்தது. அதனில் ஏறுவதற்கென படிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. நான்கு பனை மரங்களை அமைத்து அமைக்கப்பட்ட பரனிலே ஏறிப் பார்த்தால் எல்லோரும் சிறிய பூச்சிகளாகத் தெரிவார்கள். என்னுடைய குடும்பத்தாரும் சொந்தக் காரர்களும் அவ்வாறு இருக்கும் வேலையில் நான் என்னுடைய குறும்புத்தனமான செயலை செய்யத் தொடங்கினேன் ஒருவருக்கும் தெரியாமல் அந்தப் பரணிலே ஏறினேன்.

நான் அந்த உயரமான பரணிலே ஏறி இருந்த வேலையிலே திடீரெனவானத்தில் இருள் சூழ்ந்தது. நானும் அங்கிருந்த வண்ணம் வானத்துக் காட்சிகளையும் மனிதர்களுடைய நடவடிக்கைகளையும் அவதானித்துக் கொண்டிருந்தேன். இந்த நேரம் யாரும் எதிர்பாராத வண்ணமாய் பேரிரைச்சலுடன் கடலில் இருந்து அலைகள் தரையை நோக்கிவந்தன. அவ் அலைகள் மனிதர்களை முழுமயாக அழிக்கும் அளவிற்கும் காணப்பட்டது. அந்த நேரத்தில் வானத்திலே பறவைக் கூட்டங்கள் அங்கும் இங்குமாக ஓடித் திரின்தன. எனக்கு என்றால் பெறிய அதிசமயம். நான் இப்படியானதொரு ஆழிப் பேரலையை என்னுடைய கண்களால் இதுவரையில் பார்த்ததேயில்லை. ஒரு சிறிய நேரத்தில் தான் ஆழிப் பேரலையின் கொடுரமான செயல் இடம்பெற்றது. அவ் ஆழிப் பேரலையானது மிகவேகமக உயரஎழும்பி கரைக்கு வந்து கரையில் இருந்த சுற்றுவாப்பயணிகள், படகுகள், கப்பல்கள் எல்லாவற்றையும் தன்னுள்ளே இழுந்துச் சென்றது. ஒருநிமிடம் திகைத்துவிட்டேன். அதன் பிறகுதான் என்னுடைய சொந்தமும் இப் பேரலைக்குள் அகப்பட்டுவிட்டதே என்று புலம்பி சுய நினைவற்று அந்தப் பரணிலேயே வீழ்ந்துவிட்டேன்.

அவ்வாறு இருக்கையிலே பல உயிர்களை தனக்கு இரையாக்கிய கோரே அலைகள் ஓயிந்த பின்பு மீட்பு பணிகள் இடம்பெற்றன. அம்மீட்புத் தொழிலாளிகள் வாசுகியை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர். வாசுகியும் சிலநாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுசுயசினைவிற்கு வந்தாள். அவ்வாறு வந்தவுடன் தான் தனக்கு நடந்த நிகழ்வுகள் நினைவிற்குவர “ஐயோ! கடவுளே ஏன் என்னை எனது குடும்பத்தில் இருந்து பிரித்தாய். நான் இனிமேல என்ன செய்யப் போகின்றேன்” என்று சொல்லிக் கதறி அழுகின்றாள். இப்படித் தான் அழுதாலும் போன உயிர்கள் போனதுதானே இனிஒருபோதும் திரும்பக் கிடைக்கமாட்டாதவை என்று உணர்ந்தாள் வாசுகி. அவள் ஒருநாளும் அனுபவிக்காத தனிமையை அன்றைய தினமே முதன் முதலாக உணருகின்றாள். பின்னர் அவளது உடல் நிலை சரியாகவந்தவுடன் ஆழித் தாக்குதலினால பதிக்கப்பட்டு அநாதைகளாக இருந்த பிள்ளைகள் விடுதிகளிலே சேர்கக்கப்பட்டனர். அதிலே நானும் ஒருத்தியாக விடுதியிலே இனைந்தேன். அந்த விடுதியிலே என்னைப் போன்று பல சகோதரர்கள் இருந்தாலும் கூட என்னுடைய பழைய வாழ்கைக்கு என்னால் திரும்பிச் செல்லமுடியவில்லை.

இந்த விடுதியில் என்னைச் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறுவதற்குப் பலர் இருந்தாலும் என்னடையகுடும்பத்தடன் வாழ்ந்தநாட்கள் ஒருபோதும் வரவேவராது என்று நினைக்கும் போது எவ்வளவு கொடுமை தெரியுமா? என்று சொல்லிக் கதறி அழுகின்றாள். வாசுகி நாங்களும் உன்னைப் போலவே கடல் அலையின் கோரத்தினால் எங்களுடைய பிள்ளைகளை இழந்து இங்கே தனிமையில் வாடுக்கின்றோம். என்று கூறுகின்றனர். இவ்வாறு வாசுகி தன்னடைய சோகக் கதையை இவர்களிடம் பகிர அவர்களும் பகிருகின்றனர்.

இவ்வாறு கதைக்குக் கொண்டிருக்கையில் வாசுகி தன்னுடைய வீட்டிலே மிகவும் உல்லாசமாக வாழ்ந்தவள். அவளுக்கு விடுதி வாழ்க்கை சிறைச்சாலை வாழ்க்கை போல இருந்தது. இவர்களும் தங்களுக்கு பிள்ளைகள் இல்லையென்று சொல்லுகின்றார்களே? நான் இவர்களுடன் சென்றால் மீண்டும் சந்தோசமாக வாழலாம் வாசுகி எண்ணினாள். வாசுகி எண்ணியதைப் போலவே இவர்கள் வாசுகியை தங்களுடன் அழைத்துச் செல்ல விரும்பி வாசுகியபை; பார்த்து “வாசுகி நீ எங்களுடைய வீட்டுக்கு வருகின்றாயா? என்று கேடடுகின்றனர். வாசுகியும் சிறுபிள்ளைதானே அவளும் உடனே சரி என்று பதிலளித்தாள்.

இவர்கள் மூவரும் வாசுகியின் வீட்டுவிடுதிக்குச் சென்று விடுதியில் இருந்து வாசுகியை தங்களுடைய வீட்டுக்கு கூட்டிச் செல்வதற்கு அனுமதி கேட்கின்றனர். அனுமதியும் வழங்கப்பட்டது. வாசுகி மிகுந்த எதிர்பார்புடன் தனது பெற்றோர் மாதிரி எண்ணியவர்களுடன் செல்கின்றாள். அங்குசென்றவுடன் தன்னுடைய வீடு தன்னுடைய குடும்பம் என்ற எண்ணத்தை வளத்துக் கொள்கின்றாள். வீட்டில் உள்ள எல்லா இடங்களையும் சுற்றிக் பார்கின்றாள் வாசுகி. நாட்கள் ஓடின வாசுகியும் தன்னுடைய செயற்பாடுகளை செய்து கொண்டுவந்தாள். ஒருநாள் அந்த வளர்ப்புத் தாய் வாசுகியை அழைத்து “குளியலறையில் இருக்கும் என்னுடைய துணிகளை துவைத்துப் போடு! என்று கோபமாகக் சொல்லுகின்றாள். வாசுகியும் ஒன்றும் தெரியாதவளாய் சொன்ன வேலைகளைச் செய்து வந்தாள். வாசுகி அந்த வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் ஓடின. வாசுகியும் அயலவர்களுடன் சகஜமாக உரையாடுவாள். அவர்களும் வாசுகியும் நன்றாகவே கதைப்பார்கள்.

இவ்வாறு நாட்கள் ஓடியவண்ணமேசென்றது. இப்பொழுது வாசுகிக்கு வேலைகளும் கூடிச் செல்கின்றது. வாசுகியினுடைய எண்ணமோ வேறு இங்கு உல்லாசமாக வாழலாம் என்று எண்ணிய வாசுகி கொஞ்சம் கொஞ்சமாக கவலையடைகின்றாள். ஓரு நாள் பக்கத்து வீட்டு அயளவருடன உரையாடும் போது அவளுக்கு இன்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பொழுதுதான் “உன்னை இவர்கள் வளர்பதற்காக கூட்டிவரவில்லை தங்களுக்கு வேலைக்காரியாகக் கூட்டிவந்தனர்” என்று கூறுகின்றாள் பக்கத்து வீட்டு அயலவர். இதனை அறிந்த வாசுகி மீண்டும் குமுறி அழுகின்றாள்.

வாசுகியைக் கூட்டி வந்தவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் உல்லாசமான வாழ்க்கை வாழ இவர்கள் ஆதரவற்ற பிள்ளைகளைக் கொண்டவந்து தமது வீடுகளில் வேலைக்கு அமர்ததுகின்றனர். இவர்கள் உள்ளாசமாக வேவாழ்கின்றனர்.

தனது குடும்பத்துடன வாழ்ந்த வாசுகி தனது பெற்றோருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தாள். பின்னர் ஆழிப்பேரலையில் தன்னுடைய குடும்பத்தைத் தொலைத்த வாசுகிக்கு மீண்டும் ஒரு புது வாழ்க்கை கிடைத்தது. அவ் வாழ்க்கையும் இறுதியில் ஏமாற்றத்தையே கொடுத்தது. எனினும் இவ்வாறு பல துன்பங்களையே மாறி மாறி அனுபவித்தாலும் அங்குதான் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கழிப்பதாக தீர்மானிக்கின்றாள் வாசுகி. இந்த சிறுமிக்கு இனிவாழ்வில் என்னதான் நடக்கப் போகின்றதோ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s