அறிந்து அணுகு (சமூக நோக்கு) by T. Thevikaran

தொலைபேசியில் தனது நண்பன் சொன்ன (தன் வாழ்வை காரிருள் சூழ்ந்தது போன்றதான) அந்த செய்தியைக் கேட்டவுடன் அவளது உடல் நடுங்கி நாவரண்டு கணகள் நீர் இரைக்க கையில் இருந்த தொலைபேசி கை நலுவி தரையில் விழுந்தது கூட அறியாதவளாய் வெக்கமுற்று தலை தரையைத் தொட வீழ்ந்தாள் மாலினி. அவளின் கூந்தல் முகத்;தை மூடி தரையில் முகத்திற்கு முப்புரமாக பரந்து கிடக்க கண்களில் இருந்து பெருகிய கண்ணீர் வெள்ளம் அந்த கூந்தலை நனைத்தது.

அவள் ஆறுமாதங்களுக்கு முன்னர் தனக்கு வந்த ஒர் புதிய இலக்க தொலைபேசி அழைப்பை நினைவில் மீட்டுப் பார்க்கின்றான். “ஹலோ நான் சந்;தோஸ் கதைக்கிறன் தற்போது எனது தாய்கொடுமையான நோய்க்கு உட்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அவளுக்கு யூ குறுப் இரத்தம் வேண்டும்மென வைத்தியர்கள் சொல்ராங்க நான் நிறைய வைத்திய சாலைகளில் விசாரித்த போது நீங்கள் இதற்கு முதல் ஒரு வைத்தியசாலையில் இரத்தம் கொடுத்து உதவி இருப்பதனையும் உங்களது இரத்தத்தின் குறுப் யூ என்பதனையும் கேள்விப்பட்டேன். அவ்வாறாக எனது தாய்க்கும் இரத்தம் கொடுத்து உதவி செய்ய முடியுமா? என அந்த புதிய இலக்கத்தில் இருந்து அழைத்த இளைஞன் கூறினான். அதற்கு அவள் “சொறி என்ட பிளட் குறுப் யூதான் ஆனால் நான் யாருக்கும் பிளட் எந்த கொஸ்பிட்டல்லையும் கொடுக்கவில்லை நீங்க றோங்க கோல் பண்ணிடிங்க”எனக் கூறினான்.

“பிளிஸ் இப்படிச் சொல்லாதிங்ன எப்படியாவது உதவி செய்யுங்க என்ட இம்மாட உயிரைக் காப்பாற்றுங்க”என அழதவர்கள் கதைப்பது போலவே பரிதாபக் குரலிள் கெஞ்சிக் கேட்டான் சந்தோஸ். “ஐயோ பிரதேர் நான் யாருக்கும் பிலட் கொடுக்கவும் இல்ல எனக்கு அப்படி ஐடியாவும் இல்ல”என மெல்லிய குரளில் பொறுiயாக கூறினான். “அப்படிச் சொல்லாதீங்க பிலிஸ் எப்படியாவது உதவி செய்யுங்க பிலிஸ் பிலிஸ்”என மிகவும் இறங்கி பரிதாபத்தின் உச்சத்திற்கே அவனது குரள் போனது. “உங்களிற்கு கதைக்கிறது விளங்குதில்லையா? பிளிஸ் போன வையுங்க”எனச் கூறி அழைப்பை துண்டித்தான். சற்று கோபமடைந்தவனாய்.

மாலினி 21 வயதுக் கொண்ட ஓர் அழகானவள். தற்போது க. பொ. தர உயர்தர பரீட்சை எழுதி முடிவடைந்த நிலையில் அரச தொழில் நுட்பக் கல்லூரியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கணினி கற்கை நெறி ஒன்றினை மேற்கொன்டு வருகின்றாள். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த அடக்கமான பெண். வீட்டில் பெற்றொருக்கு ஒரேயொரு பிள்ளை அதனால் செல்லமாக வளர்ந்தவள், எதையும் இலகுவில் நம்பும் உள்ளம் கொன்டவள். மாலினியின் தோற்றம் சிரித்தால் குழிவிழும் கன்னங்கள், வெள்ளைத்துணியில் கரும் புள்ளி பட்டாற் போல கீழ் உதட்டின் இடப்பக்கம் இருக்கும் இரட்டை மச்சம், அரை வெறிகாரனின் கண்கள் போன்ற பார்போரை வெறி ஏற்றும் இரு கண்கள், மீன் குமிழ் போல ஆடைக்கு மேலே உயர்ந்திருக்கும் மார்பு, நடக்கும் போது முறிந்துவிடுமோ என என்ன நினைக்கும் ஒடுங்கிய இடை என மாலியின் தோற்றம் அனைவரயும்; ஈர்க்க கூடியதாகவே இருக்கும்.

அதே நாளில் மறுபடியும் இரத்தம் கேட்டு கெஞ்சிய அந்த இளைஞனின் அழைப்பு பல தடவைகள் மீண்டும் மீண்டும் மாலினியின் தொலைபேசியை நச்சரித்தும் கொன்டிருந்து. ஆயினும் அவள் அழைப்பை துண்டிக்கவும் செயிதாள் ஆனாலும் அவனது அழைப்பு மறுநாளும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இத்தோடு அவனிடம் இருந்து ஒரு குறுந்தகவலும் அவனது தொழைபேசிக்கு வந்தது. “உங்களை டிஸ்டொப் பண்ணினத்திற்கு சொறி என்ட அம்மாட்ட இருந்த உண்மையான பாசத்தாலதான் அவட உயிரக் காப்பாற்ற உங்களிட்ட இருந்த ஒரு ஹெல்ப் கிடைக்காதா என்டுதான் வேற வழியில்லாம உங்களுக்கு நிறைய தடவ கோல் பண்ணிட்டன் சொறி உங்கள தொல்லை செய்ததிற்;கு” என அவன் பதிவு செய்து அனுப்பியிருந்தான். அதனை எண்ணி பரிதாப ஊற்றுக்கள் ஊறத் தொடங்கின.

தற்போது மாலினி தரையில் இருந்து, மலையில் உறங்கி இருந்த முகில் மலையை விட்டு அகழுவது போல எழுகின்றாள். கண்ணீராள் நனைந்து முகத்தினை இடது கையால் துடைத்து மறுகையால் நெற்றிபக்கமாக சரிந்து கிடந்த முடியினை வாறி ஒதுக்கியபடி தனது படுக்கை அறைக்குள் நுழைந்து கட்டிலில் திடீர் என தன்னை அறியாதவளாய் வீழ்ந்து அங்கிருந்த தலையனையினை கட்டி அனைத்தபடி நெற்றியில் தாக்குன்டு பொறி கலங்கிய பெண் யானை போல தெளிவற்றவலாய் வீட்டில் கூரையினை பார்த்த படி ஆழ்ந்த சிந்தனைக்கு உட்பட்டாள.; அந்த இளைஞனிடம் இருந்து மீண்டும் 03 நாட்களின் பின்னர் ஓர் அழைப்பு வந்தது அந்த இளைஞனிடம் அவள் கொன்ட அனுதாபத்தினாலும் அவனது தாய்க்கு என்ன நடந்தது என்பதை அறியும் எதிர்பார்புடனும் அந்த அழைப்பை ஏற்கின்றான் “ஹலோ பிலிஸ் தயவு செய்து கோவப்படாதீங்க நான் உங்களிட்ட பிளட் கேக்கமாட்டன் அதற்கு தேவையும் இல்ல அம்மாவிற்கு குறித்த நேரத்தில பிளட் வழங்காததால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டா”என்றான். இதைக் கேட்டவுடன் அவளது கண்கள் இவனை அறியாமலே கண்ணீர்த் துளிகளை பூமியை நோக்கி பெருக்கத்துவங்கியது. அவனது அம்மாவிற்கு தான் உரிய நேரத்தில் இரத்தம் லழங்கியிருந்தால் மரணத்தை தவிர்த்திருக்காலம் என நினைக்கின்றாள் மாலினி. அதன் காரணமாகவோ என்னவோ அவன் மீது அவளுக்கு ஓர் இனம்பிரியாத ஈர்ப்பு முனைக்கப்படுகின்றது. அவனது ஏக்கமான அந்த குரலிற்கு பதிலளிக்கின்றான். “என்ன மன்னித்துக் கொள்ளுங்க. என அழுதபடியே கூறி தொலைபேசியில் அழைப்பை துண்டிக்கின்றான்.

சிறிது நேரத்தின் பின்னர் இந்த இனைஞனுக்கு அவனே அழைப்பை மேற்கொன்டு கதைக்கின்றான். உங்கள் அம்மாவின் மரணத்திற்கு ஏதோ ஒரு வகையில் நானும் காரணமாகிவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் எனவும் என மரணம் என்பது இயற்கையானது. அது யாரையும் விட்டு வைக்காது எல்லோரும் என்றாவது ஓர் நாள் மரணத்தால் ஆட்கொள்ளப்படுவோம் என்றெல்லாம் பல ஆறுதல் பேச்சுக்களை அவனுக்கு எடுத்துக் கூறி அவனது துக்கத்தில் பங்கேடுத்துக் கொள்கின்றாள். இவ்வாறு ஒவ்வொறு நாளும் அவனிற்கு மாலினி ஏதோ ஒரு வகையில் ஆறுதல் கூறுவதில் இருந்து தன்னை தள்ளி வைக்கவில்லை. சில சர்தர்ப்பங்களில் தொலைபேசியில் கதைக்கும் போது சந்தோஸ் அழுத சந்தர்ப்பங்களும் இருக்கின்றது.

இவ்வாரு தொலைபேசி மூலமாக அவர்களது உறவு வளர்ந்து சந்தித்து பேசும் அளவிற்கு சென்றது. இரு தடவைகள் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். மாலினி; தனது குடும்பத்தை பற்றியும் தனது வாழ்கையை பற்றியும் தன்னை அறியாமலே சந்தோஸிடம் கூறினாள். ஆனால் அவன் தனது வாழ்வை பற்றி ஒரு போதும் மாலினியிடம் கூறியதில்லை. சரி அம்மா இறந்ததால் மனசு புண்பட்டவன் தானே என அவள் விசாரிக்கவும் இல்லை. இவ்வாறான இவர்களது உறவின் வளர்ச்சி காதலாக மலர்ந்தது. இதுவரையில் இரு தடவைகள் நேரில் சந்தித்திருந்த அவர்கள் தற்போது அடிக்கடி சந்திக்க துவங்கினர். காதலர்கள் தானே! இருவரும் முத்தங்களும் பகிர்ந்து கொன்ட சந்தர்ப்பங்களும் உன்டு.

மாலினி சந்தோஸ் தன்னை திருமணம் செயிவான் என முழுமையாக அவனை நம்பினாள். ஒரு நாள் சந்தோஸ் தனிமையில் சந்திப்பதற்கு மாலினியை அழைத்தான். அவளும் தன்னடைய பெற்றோரிடம் தன் நண்பியை பார்க்கப்போறேன் என்று பொய் சொல்லிவிட்டு அவனோடு போகின்றாள். சந்தோஸ் என்ன சொன்னாலும் செய்யும் அளவிற்கு தனது அன்பு எனும் மாய வலையில் அவளை சிக்க வைத்துக் கொன்டிருந்தான். இருவரும் பாலைவனம் போல மனம் நிறைந்த கடற் கரை ஓரத்தில் குளிர்காற்று காதலை ஊக்குவித்து வீச “சந்தோஸ் ஐ லவ் யூ டா நா உன்ன ரொம்ப மிஸ் பன்றன்”இ“லவ் யூ டி மாலினி” என கட்டி அனைத்த படி முத்த மழை பொழிந்த வண்ணம் செல்லமாக காதலர்களின் மொழியில் மௌனமாகவம், உரையாடல் மூலமாகவும் பேசிக் கொன்டிருந்தனர். இயற்கையின் விதியால் இது மழை பொழிவதற்கு தகுந்த காலமாக இல்லாத போதிலம் இருள் சூழ்ந்து முறை தவறி மழை பேய்வதற்கான அறிகுறியும் தெரிகின்றது. பின்னர் இடி இடிக்க மழை பெய்யத் துவங்குகின்றது. அவர்களை மழைத்துளிகள் சிறிது சிறிதாக விழ்ந்து நனைக்கின்றது.

மழைக்கு ஒதுங்குவதற்காக இருவரும் அப்பகுதியில் இருந்த சவுக்கு மரங்கள் நிறைந்த காட்டை அடைகின்றனர். மழை நீடித்தது குளிர் அவர்களின் கரங்களை கோர்த்து அனைக்க தூன்டியது, வயதின் நன்மை உடல் வெப்பத்தை பறிமாற எண்ணியது. மனதால் பிணைக்கபட்டு ஓர் உயிர் ஆயினர். ஆசை ஓசையில் அவர்களது திருமணத்திற்கு முன்னதான முறையற்ற பினைப்பு முடிவடைய காலம் தவறிப் பெய்த மழையின் மன்னனுடனான பினைப்பும் நின்றது. மழை இருள் அகன்றது அது போல் மாலினியின் கற்பும் அவளை விட்டு அகன்றது. மாலினி தன்னை அறியாமல் தனது இளமையின் காரணமாகவும் முக்கியமாக சந்தோஸ் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக நடந்த தவறை எண்ணி அழுகின்றாள் மனம் வருந்துகின்றாள். சந்தோஸ் உனக்கும் எனக்கும் எப்போதோ திருமணம் முடிந்து விட்டது நமது மனதாள். இப்போது உடலாள் முடிவடைந்துள்ளது. நாம் இறக்கும் வரை ஒன்றாகவே இருப்போம் என்றெல்லாம் பல ஆறுதல்கள் கூறி மாலினியை வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

மறுநாள் மாலினி சந்தோஸ்யிடம் கதைக்க ஆசைபட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொன்டு கதைகின்றாள். அவனது பேச்சில் இதற்கு முன்னர் கதைத்ததை விட ஓர் மாற்றம் தெரிகின்றது. அதை மாலினி பெரிதாக எடுக்கவில்லை. அன்று இரவு ஏதோ ஓரு கவலையில் உறங்கி விட்டாள் மாலினி. பொதுவாக சந்தோஸ் தினசரி இரவில் அழைப்பை மேற்கொன்டு அவளோடு கதைப்பான். ஆனால் அன்று அழைப்பை மேற்கொள்ளவில்லை. காலையில் எழுந்தவுடன் மாலினி சந்தோஸ் இரவு அழைத்திருப்பானே ஆயினும் நான் உறங்கி விட்டேனே! என என்னி வேதனையோடு தொலைபேசியை பார்த்தாள். ஆனால் அதில் தவறிய அழைப்போ, குறுந்தகவலோ இருக்கவில்லை. சற்று மனங்கலங்கிய அவள் அதனையும் பெரிய புள்ளியாக நோக்கவில்லை. பின்னர் சந்தோஸிக்கு அழைப்பை மேற் கொள்கின்றாள். சந்தோஸிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. ஆயினும் மாலினி அவன் வசம் கொன்ட காதலினாலும் தனக்கு நடந்த சம்பவத்தினாலும் மீண்டும் மீண்டும் அழைத்தாள். அவனது ஏக்கத்ததுடனான அவளுடைய அழைப்புக்களை அவன் பல நாட்களாகியும் ஏற்க்கவில்லை. அவனை நேரில் சென்று பார்ப்பதற்கும் அவன்மாலினிக்கு தன்னைப் பற்றிய உன்மை தகவல்கள் எதனையும் மறந்தும் கூட கூறவில்லை.

சில தினங்களின் பின் அவனது குரல் அவளது செவிப்பறைகளை எட்டியது. “பிளிஸ் எனக்கு எந்த நேரமும் கோல் பண்ணாத எனக்கு நிறைய வேலையிருக்கு நான் உன்னிட்ட பிழையா நடந்திருந்த மன்னிச்சிக்கொள்ளு”
“சந்தோஸ் நீயா இப்படி கதைக்கிற? உனக்கு நான் எத்தன தடவ கோல் பண்ணியிருக்கேன் ஒரு வாட்டியாவது என்னோட கதைக்க உனக்கு விருப்பம் வரலையா. ஏன் இப்படி எறிஞ்சு விழுற உன்ன நம்பித்தான் நான் என்ட வாழ்கையை உனக்கு கொடுத்தேன் பிளிஸ் இப்படிச் சொல்லாத நான் கதறிக் அழுவது உனக்கு கேட்க்கவில்லையா.

“நீ அழுகிறத கேட்க நான் யாரு இப்படி நீ அழுறதாள எந்தப் பயனும் இல்ல நான் ஒன்டும் உன்ன லவ் பண்ணல உன்னத்தான் அம்மாவிற்கு சுகமில்ல பிளட் வேணும் என்று சொல்லி ஒரு நாடகத்தை போட்டு லவ் பன்ன வைச்சிட்டேன் ஓகே. சோ எல்லாம் முடிஞ்சி இந்த காலத்தில நிறைய பொண்ணுங்களுக்கு இதொல்லம் புதிசில்லதானே. நீயும் அப்படியே இருந்திட்டு போ?

ஐயோ கடவுளே நான் இவனோடு என்னத்திற்காக கதைச்சி லவ் பண்ணினேனோ அதுவே பொய் என்கின்றானே அடி வயிறு எரிகிறதே பலம் குறைந்து தலை சுற்றுகிறதே பிளிஸ்டா பிளிஸ் நீ என்ன எப்படி நினைச்சாயோ? எனக்கு தெரியல்ல ஆனால் நான் உன்;ன உண்மையாத்தான் நினைச்சி லவ் பன்னினேன் பிளிஸ்டா என்ன கைவிட்டிடாத நான் உன்னை நம்பித்தான் என்ட விலை மதிப்பில்லாத நான் உயிர விட பெரிசா நினைக்குற கற்பயே இழற்திட்டு நிக்கேன் பிளிஸ்டா வா நம்ம எங்காயவது போய் சந்தோசமா வாழ்வோம்.

“ஏய் உன்னோட கதைக்கிறதே பெரிய விசியம். அதுக்குள்ள உனக்கு கலியாணம் கேக்கிதா இப்ப நான் உன்ன கலியாணம் கட்டினா இன்னும் ஐந்தாறு பெண்களின்ட கற்ப யாரு அனுபவிக்கிறது? போடி உன்ட லவ்வும் நீயும் வேற யாரையாவது பிடிச்சிகோ ஓகே குட் பாய்”எனக் கூறி தொலை பேசியை துண்டித்தான். இவனது இந்த வார்த்தைகளை கேட்டதும் அவளது மனதிற்குள் பூகம்பம் வெடித்தது போல இருந்தது. குருதி ஓட்டம் எல்லை மீறி சுவாசிக்க அவதியுற்றாள். புரண்டு புரண்டு அழுதாள்.

அறிமுகம் இல்லாத ஒருவனுடைய பொய்யினை நம்பி தேவையற்ற ரீதியில் பழகியதல் காரணமாக தனது வாழ்க்கை பறிபொய் விட்டதே என்பதை எண்ணி எண்ணி அழுவதும் அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தி கதைக்க முயல்வதுமாக கொஞ்ச காலத்தை கழித்தாள். பின்னர் அவனது தொலைபேசி துண்டிக்கப்பட்டது. பலநாட்கள் கடந்தன மாலினி தன் நிலையை சற்று மாற்றிக் கொன்டு தனது வாழ்வில் இனிமேல் ஆண என்ற பேச்சுக்கோ, திருமணம் என்ற பேச்சிக்கோ இடமில்லை என முடிவெடுத்தாள். தன் தவறை உணர்ந்து புது வாழ்க்கை வாழ தான்னோடு இயைவுபட்டு வாழ்ந்து வந்தாள்.

ஒரு நாள் அவனது தொலைபேசிக்கு புதிய இலக்கம் ஒன்றில் இருந்து அழைப்பு வருகின்றது. அவளது மனம் அது சிலவேலை சந்தோசாக இருக்ககூடுமோ என நினைக்கின்றது. அதனால் அவள் அழைப்பை துண்டிக்கின்றாள் மறுபடியும் அதே இலக்கத்தில் இருந்து மீண ;டும் அழைப்பு வருகின்றது யாரேன்றுதான் பார்போமே என உறுதி செய்து அழைப்பை ஏற்கின்றாள். ஒரு ஆனின் குரல் மாலினிக்கு எங்கோ கேட்டது போன்று உள்ளது. ஆனால் ஊகிக்க முடியவில்லை.

“மாலினி நான் தான் உன்னோட யுஃடு படிச்ச ஜனா கதைக்கிறன்”என அந்தக் குரலில் உரு ஏளனமான இழிவுப் பேச்சு தெரிந்தது.
“நீங்களா சொல்லுங்க ஜனா”
“நான் உன்னிட்ட நிறைய கதைக்க விரும்பவில்லை. மாலினி உன்னிட்ட ஒரு விஷயம் நொல்லதான் எடுத்தனான்;”
“சொல்லுங்க ஜனா என்ன விஷயம்”
“நீ நல்லவ என்றுதான் நான் அப்போயிருந்தே உன்ன நினைச்சிட்டு இருந்தனான். ஆனால் அது வழுத்துவறு என இப்பதான் தெரியிது.”
“ஏன் ஜனா என்ன நடந்தது”என பயந்த குரலுடன் மாலினி கேட்டாள் சில வேலை சந்தோஸ் தங்களுக்குள் நடந்தவற்றை அவனிடம் சொல்லி இருப்பானோ எண்ணிய படியே தொலைபேசியில் இருந்து வரப்போகும் ஜனாவின் பதிலை பீதியோடு கேட்கின்றாள். “நீயும் இன்னொரு ஆணும் பிழைய நடந்ததை யாரோ வீடியோ பண்;ணியும் போட்டோ பிடிச்சும் பேஸ்புக்லையும், யூடியுப்புலையும் போட்டிருக்காங்க. உன்னாலையேல்லாம் எப்படித்தான் இப்படி நடக்க முடிகிறதோ தெரியல்ல சீ……”எனக் கூறி தொழைப்பேசி அழைப்பை துன்டித்தான்.

கட்டிலில் இருந்து அழுத மாலினி கண்களை திறந்து கொண்டு நிலத்தில் இருந்த படியே கட்டிலில் அவளது பின் புறம் படும்படி சாயிந்து கொன்டாள். முன் பின் தெரியாத கேவலமான நடத்தைக் கோளமுடைய ஒருவனோடு பழகினதாலதான் என்னுடை வாழ்கை கேள்விக்குறியாயிற்று.

எனது இந்த நிலயை எந்த பெண்ணிக்கும் கனவில் கூட வரக்கூடாது என எண்ணுகின்றாள். தனது வாழ்வின் இறுதி நொடிகளாக அவற்றை தீர்மானித்து அவனோடு பழகி தனது கற்பினை இழந்து ஏமாற்றபட்டு, அவமானப்பட்டதற்காக உயிரை விட நினைத்து தூக்கு மாட்டி இறக்கின்றாள்.

மரண ஓலம் நிறைந்த மாலினியின் வீட்டுக்கு ஊரே வன்திருந்தது, ஆயினும் அவளது இறப்பிற்கான காரணம் அறிந்த மனிதர்கள் அவளின் பூத உடலைக் கூட குற்ற உணர்வோடு பார்த்துக் கொண்டிருப்பதே உலக நியதி. மாலினி தான் செய்தது தவறு என உணர்ந்திருந்தாலும் அந்த மரண வீட்டில் எத்தனை பெயர்தான் அவள் பக்கம் இருந்த உண்மையை உணர்வார்கள். அதே அவர்களுக்கு உனர வைக்க மாலினி என்ன? உயிரோடா இருக்கின்றாள்.

அழும் ஓசையும், அயலோரின் பேச்சும், நண்பர்களின் தவிப்பும் நிறைந்த அந்த மரண வீட்டில் மாலினியின் வயதை ஒத்த ஒரு பெண்ணிற்கு புதிய இலக்கம் ஒன்றில் இருந்து அழைப்பு வருகின்றது.

“ஹலோ நான் முறுகேஸ் கதைக்கின்றேன் என்ட அப்பா இரவு அக்சிடன்ட் ஆயிட்டார் இப்ப அவசர சிகிச்சை பிரிவில இருக்கார் பிளிஸ் உங்கட டீூபிளட் தானே கொஞ்சம் தந்து உதவி செய்ய முடியுமா??”…….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s