அவன் நன்பன் அல்ல…… by Yo. Swasthika

அவனுக்கு தான் செய்தது அவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்போதுதான் புரிந்தது.

“நான் எப்படி அவனைப் பற்றி அவ்வாறெல்லாம் கற்பனை செய்தேன்”
“என்ன இருந்தாலும் அவன் என்னுடைய நன்பன்.”
“அவனைப் போய் இவ்வாறெல்லாம் நினைத்து விட்டேனே?

என்றெல்லாம் தன்னைத்தானே கேள்வி கேட்டுத் திட்டிக் கொண்டிருந்தான் வாசு. சிறிது நாட்களுக்கு முன் தன்னுடன் சிறுவயதில் ஒன்றாகப் படித்த ரகுவை தெருவில் சந்தித்த போது நடந்தவைகளை ஒவ்வொன்றாக மீட்டுப் பார்த்த வேலையிலே சிறு வயதில் நிகழ்ந்தவை அனைத்தும் நினைவுகளாக அவனைச் சூழத்தொடங்கின.

அழகிய பூஞ்சோலைக் கிராமம். அங்கிருந்த நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன் ரகு. ரகுவின் வீட்டிற்கு அருகில் போரில் தந்தையை இழந்தமையினால் வறுமையின் சிக்கித்தவிக்கும் வாசுவின் ஏழைக்குடும்பம் வசித்து வந்தது. என்னதான் வாசுவைவிட ரகு சற்று வசதி படைத்தவனாக இருந்தாலும் ரகுவும் வாசுவும் மிகுந்த பாசத்துடனும் பழகி வந்தார்கள். எப்பொழும் ஒறாகவே இருப்பார்கள்.

இணை பிரியாத நண்பர்களாக விளங்கிய இருவரும் எதிர்பாராத விதமாக பிரிய சேர்ந்தது. ஒரு நாள் பின்நேரம் வழக்கம்போல ரகுவைப் பார்க ரகுவின் வீட்டிற்கு வந்தான். முன்கேற்றை திறந்து, உள்ளே சென்றான் வாசு. வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. முன் கதவருகில் சென்று

“ரகு, ரகு கதவைதிற, நான் வாசு வந்திருக்கிறேன்.”எனப் பலமுறை அழைத்துப் பார்த்தான்.

எந்த பதிலுமே இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் வாசுவிற்கு அழுகை அழுகையாக வந்தது. ஒரு கணம் வானமே இடித்து விழுவதைப்போல இருந்தது. சொன்னதைக் கேட்டபோது.

“என்னடா வாசு ரகுவையா தேடி வந்திருக்கிறாய்? அவர்கள்தான் குடும்பத்தோடு ஊரை விட்டே சென்று விட்டார்களே.”

வாசுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “ரகு ஊரை விட்டு சென்றுவிட்டானா.”“ரகு என்னை விட்டு சென்று விட்டானா?” என அழுது கொண்டு வீட்டுக்குச் சென்றான். இரண்டு நாட்கள் வாரங்களாகியது. வாரங்கள் மாதங்களாகியது மாதங்கள் வருடங்களாகியது. நாற்பது வருடங்கள் கடந்து விட்டாலும் இன்னும் ரகுவை மறந்து விடவில்லை.

பல வருடங்களுக்குப் பிறகு ரகு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாக அறிந்தான் வாசு. ரகுவைச் சென்று பார்க்க ஆசையாக இருந்தாலும் தன்னுடைய எழ்மை நிலையின் காரனமாக அவன் என்னை மதிக்கமாட்டான். என்னுடன் பேச மாட்டான். அவன் இருக்கும் நிலைக்கு அவன் என்னை மறந்திருப்பான். அவன் சிறு வயதிலேயே என்னை உன்மையான நண்பனாக ஏற்கவில்லை. அப்படி ஏற்றிருந்தால் சென்றான் என்றைல்லாம் என்னிக் கொண்டிருந்தான்.

“என்ன இருந்தாலும் அன்று என்னிடம் சொல்லாமல் சென்றவன்தானே”
“சரியான திமிர் பிடித்தவன்”
“இன்னும் என்னை ஞாபகம் வைத்துக்கொண்டா இருக்கப் போறான். எப்பவோ என்னை மறந்திருப்பான.;”
“நான் மட்டும் அவனை ஏன் நினைக்க வேன்டும்?”என தன் மனைவி மைதிலியிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

இரண்டு நாட்களிள் பின் காலையில் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வாசு கடைக்குச் சென்றான்.

வழியில் வாசு ரகுவைக் கண்டான். வாசு ரகுவை அடையாளம் கண்டு பிடிப்பதற்கு முன்னர். ரகு வாசுவை அடையாளம் கண்டு பிடித்து விட்டான். உடனே வாசு என்று கத்திக் கொண்டு ரகு வாசுவை நோக்கி அத்தினை கூட்டத்திற்கு நடுவிலும் ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்டான். பல வருடங்களின் பின் சந்தித்தமையினால் இருவர் கண்களின் ஓரத்திலும் கண்ணீர்த் துளிகள் பனித்தன. ஒரு நிமிடம் வரை இருவரும் பேசாது ஒருவரை ஒருவர் பார்த்தபடி மௌனித்து நின்றனர்.

ரகு தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.
“வாசு எப்படியடா இருக்கிறாய்?”என உணர்ச்சி பொங்கக் கேட்டான்.
“ஏனடா என்னை வந்து பார்க்கவில்லை? உன்னை மட்டும்தான் பார்க்கவில்லை”
“உன்னைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்”
“எங்கேயடா இருக்கிறாய் இப்பொழுது”
என்றெல்லாம் பட படவெனக் கேட்டான். வாசுவோ மனத்திற்குள் “இவன் திமிரைப் பார் என்னை எவ்வளவு ஏளனம் செய்கிறான்”
என்நிலை அவ்வளவுக்கு இவனுக்குத் தெரியாதா? நான் என் வீட்டில் தானே இருப்பேன். இவன் வந்து என்னைப் பார்த்திருக்கலாம் தானே? அதிகமாக பணத்தைப் பார்த்தவுடன் எப்படியெல்லாம் மாறிவிட்டான்.”என எண்ணியபடி மெதுவாக ரகுவைப் பார்த்து புன்னகை பூத்தான் வாசு. பின்

“நான் நலமாகத் தானடா இருக்கிறேன்”என்றான். சிறிது நேர உரையாடலின்பின் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு வீட்டிற்குத் திரும்பிகனான் வாசு.

அதன் பின் திடீரென்டு ஒரு நாள் வாசுவைத் தேடி வாசுவின் வீட்டிற்கு வந்தான் ரகு. அப்பொழுது ரகு வாசுவிடம் “வாசு எனக்கு அவசரமாக ஒரு வீடு கட்ட வேன்டும். இன்டைக்கே நான் கொழும்புக்குப் போக வேணும். நான் உன்னட்டை காசைத் தாரன். நீ பொறுப்பாய் நிண்டு பார்த்துகொள் உனக்கு விரும்பின மாதிரி கட்டு எனக்குப் பிரச்சினையில்லை. உனக்கு விரும்பின பெயின்டயும் அடி. நான் இரண்டு மாதத்திலை கொழும்பாலை வந்திடுவன். வரும்போது கொழும்பிலிருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வாரன். இந்தா பிடி காசை” என ஒரு தொகைப் பணத்தை வாசுவின் கையில் திணித்துவிட்டுப் புறப்பட்டான்.

வாசுவும் தனக்குத் தெரிந்த மேஷன்மார்களைப் பிடித்து ஏனோதானோ என ஒரு வீட்டை வெறுப்புடன் கட்டினான். ஆனாலும் அழகாகத்தான் கட்டி முடித்தான்.

“நான் இருக்கும் நிலை தெரிந்தும் என்னை அவமதிப்பதற்காகத்தானே அவர் என்னிடம் வீட்டைக் கட்டித் தரும்படி சொன்னான்.” என தன் மனைவியிடம் பலவாறாக ரகுவைத் திட்டிக்கொண்டிருந்தான் வாசு.

அந்த மாத முடிவில் ரகுவும் கொழும்பிலிருந்து ஊருக்கு திரும்பியிருந்தான். வரும்போது ஏற்கனவே சொன்னது போல வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வந்திருந்தான். மூன்று நாட்களில் வீடு குடி புகுதலை வைக்கத் தீர்மானித்தார்கள். அதற்குள் வீட்டின் வேலைகளையும் முடித்து பொருட்களையும் ஓழுங்குபடுத்தி முடித்தார்கள்.

வீடு குடிபுகும் நாளும் வந்தது. வாசுவும் அவனது குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு ரகுவின் புதிய வீட்டிற்குச் சென்றான். வந்து பார்த்ததும் அதிர்த்து போய்விட்டான்.

“என்ன வீடு குடிபுகுதலுக்குகு ஒருவருமே வரவில்லையா? ரகு” என கேட்டபடி வீட்டில் தனித்து இவர்களது வருகைக்காக காத்திருந்த ரகுவிடம் கேட்டான்.
அதற்கு ரகுவோ அமைதியாக, ஆர்ப்பாட்டம் இல்லாத அவசரத்தோடு “என்னடா வாசு, இதுதான் நீவரும் நேரமா? கெதியா உள்ளுக்க வாங்க எல்லாரும். வாங்க பால் காய்ச்சுவம். நல்ல நேரம் முடியப்போகுது” என்று சொன்னான்.

வாசுவும் அவனது குடும்பத்தினரும் ரகுவை அதிசயித்து பார்த்தார்கள்.

“என்னடா ரகு ஒருத்தரும் இன்னும் வரயில்லை. நீ என்னடா எண்டா எங்களைப் பால் காய்ச்ச சொல்றாய் என்ன நடக்குது இங்க?”என ஒன்றும் புரியாதவனாக் கெட்டன்.

அதற்கு ஒரு மெல்லிய புன்னகையுடன் ரகு “டேய் இந்த வீட்டில் இருக்கப்போவது…. நீங்கள் தானேயடா?”பிறகு நீங்கதானே பால்காய்ச்ச வேன்டும் என்றான்.
வாசுவுக்கோ ஒண்டும் புரியவி;ல்லை. திருடனுக்குத் தேள் கொட்டியது போல திரு திரு வென விழித்தான். ரகுவோ ஒருகண அமைதியைத் தொடர்ந்து.

“வாசு உன் நிலைமையை நான் இங்கு வந்த உடனேயே தெரிந்து கொண்டேன். உனக்காகதானடா இந்த வீட்டயே கட்டினன்.”
“உனக்குத்தான் வீடு என்றால் வேண்டாம் என்று சொல்வாய்”
“உனக்குப் பிடித்த மாதிரி கட்ட வேண்டும் என்றதுக்காகதான் உன்னட்ட காசத் தந்து உனக்குப் பிடிச்சமாதிரி கட்ட சொன்னன்”
“என்டைக்குமே நீதான்டா என்னுடைய உயிர் நண்பன்.”
“நீயும் என்னை உன்னுடைய நண்பனா நினைச்சியென்றால் வேண்டாம் எண்டு சொல்லாமல் என்னுடைய இந்தப் பரிசை ஏற்றுக்கொள்.” எனயறான் ரகு.

இதுவரை நேரமும் மௌனித்து நின்ற வாசு ஓடிவந்து ரகுவைப் கட்டியணைத்துக் கொண்டு வாய்விட்டே அழுதுவிட்டான். அன்று தொடக்கம் வாசு ரகுவை விட்டு பிரியவே இல்லை. ஒவ்வொரு நாளும் ரகுவை அப்படியல்லாம் நினைத்ததற்காக தன்னைத் தானே திட்டிக்கொண்டு இருக்கிறான். தான் செய்தது எவ்வலவு முட்டாள்தம் என்று இப்போதுதான் புரிந்தது!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s