உறவுகள் பெரிது by Ramlar Fathima Akeela 

“ஆ……. வாங்களேன் மாமி”
“அஸ்ஸலாமு அலைக்கும்”;
“வலைக்கு முஸ்ஸலாம்” என்றவாறு உட்காரும்படி கதிரையொன்றை அளித்தாள் மாமியிடம் ஆயிஷா.
“என்ன மகள் பண்றிங்க வெகு நாட்களாக வீட்டுப் பக்கம் ஆயிஷாவ காணவே இல்லஇ ஏதும் சுகம் இல்லையா?”
“………………”
“இல்ல மாமிஇ இப்படித்தானே! மகள் பாத்திமா கைப்பிள்ளைஇ எங்கு சென்றாலும் அழத் தொடங்குகின்றாள்இ சமாளிக்கவே……. முடியல்லஇ அதாலேதான் மாமி வர நேரம் கிட்டல்ல மன்னிங்க மாமி”
“…………….”
“ஓம்… ஓம்…இ ஆ……. எனக்கு விளங்குது இருந்தாலும் உறவுகளை அப்பப்ப பாத்துட்டு வரனும்இ அப்பத்தானே பின்னுக்கு வாற சந்ததிக்கும் நம்மட்ட பரம்பரை இதுதான் என புரியும் மகள் ”
“…………….”
“ஓ…. ஓ… அது புரியிது மாமி சரி மாமி நம்மட காலிதா எப்படி இருக்கா? இ நல்லா இருக்காளா?இ அவள பாத்து பல நாளாக ஆகுது” என்ற படி ஆயிஷாஇ காலிதாவை வர்ணிக்க ஆரம்பித்தாள் மாமியிடம்;;;…
“அவள சின்ன வயசுல பார்த்தபோது உருண்டையான கண்கள் மெல்லிய சிரிப்புஇ வெண்கலம் போல் மின்னும் பற்கள்இ நீண்ட கூந்தல் அதில் சிறிய வண்ணாத்துப் பூச்சி கிளிப்”
“எவ்வளவு அழகான பிள்ளை”
“………”
“நீயும் என்ன ஆயிஷா அழகு ;தானே புள்ள” கூறினார் மாமி.
ஆயிஷா மெல்லிய சிரிப்புடன் தன் கண்களை மேலும் கிழுமாக அசைத்துக் கொண்டாள்.
“…………….”
“காலிதாவ பார்த்து பல நாளாகுவது எங்க இங்கேயா இருக்கு? குருணாகலுக்கு எல்ல போகனும் காத்தான்குடியில் இருந்து குருணாகலுக்குப்போக ரூபா 1000 மாவது தேவை”
“……………”
“ஆமாம் மாமி நீங்கள் சொல்றது சரிதான் ”
“……………”
ஆயிஷா கதையுடன் கதையாக மாமிக்கு தேயிலை கொண்டுவர அடுப்பில் ஸ்டொவை பத்த வைத்து கொதிக்க தண்ணீரும் வைத்தாள்;;;;; பாத்திமா அழ ஆரம்பிக்கும் சத்தம் கேட்டதும்இ போட்டது போட்ட படி வைத்து ஓடி வந்தாள் பாத்திமாவின் அருகில்.

“அழாதங்கம்மா? நான் எப்போதும் உன் அருகில்தான் இருப்பேன்” என ஆயிஷா பாத்திமாவை கட்டி அணைத்தாள்.
“………”
“இப்படித்தான் என் மகள் காலிதாவை என் முத்த மருமகள் மர்யம் கட்டி அனைத்தாள் காலத்தின் நியதி மண்ணாகி விட்டாள்”;
“ம்ஹ்….. என்ன செய்வது அனைத்தும் நியதியே”
“…………..”

“என்னது காலிதாட உம்மா சைனம்பு ராத்தா இல்லையா? நான் இவ்வளவு நாளாக அவதான் உம்மா என்டள்ள நினைத்து இருக்கன் பல தடவ யோசித்து இருக்கன் பெத்த மகள கொடுமைப் படுத்துரா என்று இப்பத்தானே உண்மை புரியுது. ”
“ம்…. ம்…… ”
“அது என்னவோ உண்மைதான் நீ சொல்றது சரிதான் மகள் பிறகு சைனம்பு என்ன செய்வாள் தன்ட வயிற்றுல பிறந்த பிள்ளைதான் கொஞ்சுவாள் “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே”…”
“……………..”
“நீங்கள் சொல்லுறது சரிதான் மாமி நானும் தாயை இழந்தவள்தான் அந்த வலிகள் எனக்கும் புரியும். என்ன தன்ட பிள்ள மாதிரி என் சாச்சி;யும் நீங்களும் தாங்கிப்பிடிக்கலயா? என்ன கொடுமையா செய்திங்க எனக்கு? “மனம் ஒன்று இருந்தால் ஒரு இடமும் இருக்கும்”…..;.”
“………….”
பதில் பேச முடியாத மாமி அலைந்தோடிய மனதை ஒரு நிலைப்படித்தினாh.;
“காலிதாவுக்கு வலதுகால் ஊனம் என்டு நீ கேள்விப் பட்டியா”? என ஆயிஷாவின் மாமி புத்தகத்தை புரட்டிப் போடவே ஆயிஷாவும் சாந்தமாக……..
“இல்லையே மாமி”
“……………….
“என்ட மகனும் சரியான ஆல்; காலிதாவ வலது குறைந்தோர் பள்ளியில் சேர்த்து விட்டனாராம் பாவம் புள்ள தாயின் பாசமும் இல்லாமஇ தகப்பனும் பாக்காம என்ன பன்னுதோஇ அவட மனநிலை என்னவோ? ” என தனக்குத் தானே புலம்பிக் கொண்டார் மாமி
“………………”
“என்ன மாமி சொல்லிறிங்க எனக்கு ஒன்டும் புரியல இப்படி ஒரு சேதி கேட்கவா யா அல்லாஹ் என்ன போட்டு வைத்தாய்? வலது குறைந்தோர் பாடசாலை இவ்வாறான பிள்ளைகளுக்கு உகந்தது ஆனாலும் ஏற்கனவே அன்புக்கு ஏங்கிக் கொண்டு இருக்கிறவள் கதைக்க பார்க்க ஆளில்லாத அனாதை போல் போட்டு வைத்து இருக்கிறார்களே! அவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன் ? மாமி”
“………….”

பேசிக் கொண்டே காலிதாவின் அவலைகளை கேட்டறிந்தான் ஆயிஷா பேசிக் கொண்டு இருக்கையில் நேரம் போனதே தெரியாம இருந்து மாமி அன்னார்ந்து பார்தார் “நேரம் மாலை ஏழு மணி இ நான் வீடு செல்ல வேண்டும்” எனக் கூறிக் கொண்டு ஆயிஷாவின் வீட்டை விட்டு வெளியேறினார்..
“……………”
“இந்தக் காலம் நல்ல வளர்ச்சி கண்டு இருக்கு சில சமயம் கோபம் கோபமாய் வருவது சைனம்பு ராத்தா மட்டும் கையில் கிடைத்தால் நடக்கிறதே வேற” என்ற படி இரவு முழுவதும் தூங்காமல் யோசனை செய்தாள்.
“காலிதாவின் நிலைக்கு பதில் கொடுக்க வேண்டும்”; என்று….
“……………”
சில மாதங்களில் பின்னர் காலிதாவைப் பார்க்க ஆயிஷா குருணாகல் சென்றார். அவர் இருந்த நிலையைக் கண்ட ஆயிஷா தன் பாதுகாப்பில் காலிதாவை கையோடு காத்தான்குடிக்குக்கு அழைத்து வந்தாள்.
காலிதாவின் நன்மைக்கென ஆயிஷா வீட்டில் சில தொழில்களைச் செய்து பின்னர் காலிதாவுக்கு படிப்பதற்கான ஆயத்தங்களை மேற் கொண்டாள்..

சில வருடங்களில்’;;;;………
காலிதாவுக்கு டாக்டர் பட்டமும் கிடைத்தது.
“மகள்….. கிளினிக் போகலையா?
“………………”
“இதோ புறப்படுகின்றேன் ஆயிஷாசாச்;சி என்னைஇ என் தாய்மாதிரி கவனிக்குறிங்க ரொம்பவும் சந்தோஷம் உங்களுக்கு என்ன கைமாறு செய்வேனோ………”
“……………
“இல்லம்மா….. இது என்ட கடமை எனக்கும் தாய் இல்லதான் அதுல வலி புரியும் என்னை என் சாச்சி பார்த்தது போல நான் உன்னை பார்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தேன் ”
“……………..”
இவ்வாறே பேசிய படி கிளினிக் செல்ல ஆயத்தமானாள் காலிதா. நேரம் காலை ஒன்பது மணி “நான் சென்று வருகிறேன்”; என்று கூறியவாறு கிளிக் சென்றால் காலிதா
அங்கே……………..
“அடுத்த பேஷன்ட அனுப்புங்க” என்வாறு பெல்லினை அடித்தார்.
வந்தது……….
அன்னார்ந்து பார்த்தாள்.
“வாப்பா! வாப்பா! என்னைத் தெரியலயா நான் தான் காலிதா”
“…………….”

“என்ன…. என்ட மகள் காலிதாவா?
சில நேரங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த காலிதாவின் வாப்பா மீண்டார்.
“மகள் நீங்களா என்ன மன்னிங்க மகள்இ என்ன மன்னிங்க உங்களுக்கு செய்த பாவம்தான் எங்களை வாட்டுது”
“……………”
“எங்கே மற்றவர்கள் ”
“……………..”
“அதை ஏன் கேட்கிறிங்க. …. அது கொடுமையோ கொடுமை உன் தங்கை கரீமா வீதியில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது வாகனத்தில் மோதி இறந்து விட்டார். இந்தசம்பவத்தை மனதில் எண்ணிக் கொண்டு உன் சாச்சி மனநில பாதிக்கப்பட்டு விட்டாள் ”
“வெளியேதான் இருக்கிறாள் பாருங்க…… மகள் ”
“……………”
“இன்னா லில்லாஹ்”
“……………..”
“……….”
“பார்த்த மறுகனம் முடிவொன்றை எடுத்தாள் காலிதா, என் சாச்சியா இது…… இனியும் நீங்கள் தனியாக வாழத் தேவையில்லை போன சொத்துப் போகட்டும் இனிமே எனக்கு இருக்கிற சொத்து நீங்கதான்…. ”
எனக் கூறியவாறு இருவரையும் காலிதாவின் வீட்டுக்கு அழைத்துச் சொன்றாள்…

உறவுகள் எப்போதும் கைவிடாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s