தாயுமானவள் by T. Anas Kanimozhi

“ஐயோ அம்மா பசிக்குது, தண்ணி விடாய்க்குது, என்னால முடியேல்ல. ஏதாச்சும் தாங்களன்.” அடிக்கடி இதனையே கூறிக் கொண்டு இருந்தாள் சாறுலதா.

“எதைக் கொடுப்பது?…. யாரிடம் கையேந்துவது?” என்று தவித்தாள் அங்கலாய்ப்புடன் அங்கும் இங்குமாக தன்னுடைய அகன்ற விழிகளை, தூக்கமயக்கத்துடனும், மனக் கவலையுடனும் மூடுவதும் திறப்பதுமாக நின்றாள் சாறுவின் தாய் லலிதா.

உடல் நோவினாலும், மன வேதனையாலும் குற்ற உணர்வோடு தன் மகளின் வதனத்தை ஏற இறங்க பார்த்து நொந்து போனான் சாருவின் குடிக்கார தகப்பன், லலிதாவின் கொடுமைக்காரக் கணவன் சுந்தரம்.

காதைச் செவிடாக்கி விடுமோ என எண்ணும் அளவிற்காய் வாகன இரைச்சலும், மக்கள் நடமாட்டமும் “என் இரண்டு கைகளாலும் அவர்களைக் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டால் தான் இங்கிருந்து நகர முடியும்.” என்று எண்ணிய லிலதா கங்காருவைப் போல இருவரையும் பிடித்து வீதியைக் கடக்கும் முயற்சியில் இறங்கினாள்.

வீதியைக் கடந்த மூவரையும் இருள் கவ்விக் கொண்டது. சிங்கத்தின் வாயில் அகப்பட்ட ஆட்டுக்குட்டிகளைப் போல மூவரும் செல்ல வேரு இடமில்லாது தவித்தனர். ஓர் மரத்தடி தென்பட்டது அதனகருகே ஓர் ஒளி மின்மினிப்பூச்சி ஒளிர்வதைப் போன்று ஒளிர்ந்தது. அதை நோக்கி சென்றனர் மூவரும். அம் மரத்தின் கீழே ஓர் பலகை நாற்காலியில் முதியவர் ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

மூவரைக் கண்டதும் “யாரு மனே அது? இந்த நடு ராத்திரியில உலா வாறது?” என்றார். கரகரப்பான ஒலியுடனும் பேசக் கூட தெம்பு அற்றவனாய் சுந்தரம் “ஐயா இன்டைக்கு இரவுக்கு மட்டும் தங்க ஒரு சிறிய இடம் தந்;தாலே அது மெத்தப் பெரிய உபகாரம்” என்றான். பின்னர் அவரும் தன்னுடைய சிறிய குடிசையில் தங்க இடம் கொடுத்து விட்டு ஆறுதலாக அமர்ந்த அம் மூவரையும் பார்த்து “உங்களிட்ட என்ன பிரச்சன என்டு கேக்க எனக்கு மனசு கேக்கல்ல மனே……. என்றவர் தானும் ஓர் ஓரமாக தன்பாயை விரித்துப் படுத்துக் கொண்டார்.

ஆனால் லலிதாவால் தன் கடந்த காலத்திலிருந்து மீள முடியவில்லை. சொல்லத் தொடங்கினாள் தன் சோகக் கதையை முதியவரிடம்.

தாய்க்கும் தந்;தைக்கும் ஒரே மகளாய் வறுமையின் வாசமே படாதவளாயய் வளர்ந்த என்னை திருமனம் முடித்து வைத்தார்கள். ஆரம்பத்தில் நல்ல குணாதிசயங்களுடன் இருந்த என் கணவன் அவருடைய சகபாடிகளின் தன்மையால் குடிபோதைக்கு அடிமையானார். ஆசைக்கு இரன்டு பிள்ளைகளயும், பாசத்திற்கு ஒரு மகளையும் பெற்றேடுத்த என் நெஞ்சம் தினமும் குடித்து விட்டு ஆட்டம் போடும் என் கணவரால் மிகவும் களைத்து போய் விட்டது. தாங்க முடியாத வேதனையின் மத்தியில் எனது கணவன் தனிமையில் இருக்கும் போது அவருக்கு புத்திமதிகளை கூறியபோதும் அவர் எனக்குத் தெரியாமலும் குடித்து வந்தார். அனைத்து விடயங்களையும் எண்ணும் போது என் மனம் அனலாய் கொதிக்கும், மெழுகாய் உருகும். சில சமயங்களில் குழைந்தைகளுக்கே உணவு கொடுக்க முடியாமல் புளுவாய் துடித்திருப்பேன்.

இவ்வாறு என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்திருந்த வேளை எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உரு சிறிய பெட்டிக்கடை போட்டால் என்ன? என்பதுதான் அந்த யோசனை. என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சுரேஷ் அண்ணாவிடம் ஆலோசனை பெற்றேன். அவரின் உதவியுடன் சிறு தொகையைப் பெற்று கடையை ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக வியாபாரம் முன்னேறி சூடு பிடிக்கத் தொடங்கியது. தனியாக நின்று சமாளிக்க முடியாதவளாய் என் மூத்த மகனை பாடசாலையில் இருந்து இடைநிறுத்தி கடைக்கு உதவியாக வைத்துக் கொண்டேன். கடை வியாபாரம் ஓகோ என்று சென்றாலும் என் மனம் கணவனை நினைத்த பயத்திலே மிதந்தது. சிறிது சிறிதாக பணத்தையும் எடுத்து சேமித்து வைத்தேன். நாட்கள் நகர நகர மகன்மாரின் நடத்தைகள் எனக்கு சரியில்லாதது போல சில பல சந்தேகங்கள் என்னை ஆட்கொண்டன.

எது என்னவாயினும் கடவுள் தரிசனத்திற்காக கோவிலுக்கு நானும் என் மகளும் சென்று மீண்டும் வீடு திரும்பினோம். வந்த சமயம் எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. என் வீட்டில் உள்ள பொருட்கள் அங்கும் இங்கும் வீசப்பட்டு இருந்தது. கடை தலைகீழாக இருந்தது. என்னுடைய இரு மகன்மாருடனும் சேர்ந்த இன்னும் ஐந்து பெடியன்கள் கன்கள் சிவந்த வண்ணம் மது மயக்கத்தாலும் போதைப் பொருட்களைப் பாவித்தபடியாலும் ஆட்டம் போட்டு கூத்தாடினர். நான் வீட்டிற்குள்ளே சென்று என் மூத்த மகனின் கன்னத்தில் ஒரு அறை விட்டேன்.

“என்னடா இது வீடா இல்லாடி கூத்தடிக்கிற இடமா? ஓரு பொம்பிளப்பிள்ள இருக்கிற வீட்டுல இப்படி நடக்கிறியே உனக்கு அசிங்கமா இல்ல” என்றேன். அப்பொழுது என் மகன் என்னைப் பார்த்து கூறினான் “அம்மா இது அசிங்கமில்ல இன்னைக்கு நம்ம சாறுவுக்கு நிச்சயதார்த்தம்” எனக்கு தலயில இடி விழுந்த மாதிரி இருந்தது. வயசுக்கு வந்து என்ற சாறுக்குட்டி இப்ப தான் ஆறு மாதம், அவட வயசு பதின்மூன்று ஐயோ கடவுளே! அந்த தருணம் என் மகனுக்கு என் மகனுக்கு புரிய வைக்க என்னால் முடியவில்லை. ஏன் என்றால் அவன் அவனாக இல்லை. அத் தருணம் பார்த்து என் கணவர் குடி போதையில் வந்து வாசலில் விழுந்து விட்டார். அதனைப் பார்த்தது என் மகன்மாரும் அவர்களுடன் இருந்தவர்களும் என் கணவனைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரித்தவர்களாக இருந்த சமயம் மூத்த மகன் இவந்தான் என்ற குடிகார குரு என்று சொல்லிய தருணம் என்னை தூக்கி வாரிப்போட்டது. தந்தையை தூக்கி நிறுத்தி கண்ட வார்த்தைகளால் ஏசினான் மூத்தவன். இன்னொருவன் அவனுடைய சகபாடி, சாருவின் கைகளைப் பிடித்து இழுத்தான். என் மனம் பதை பதைக்க அருகில் கிடந்த ஓர் கல்லை எடுத்து அவன் நெற்றியில் பதம் பார்த்தேன். சண்டை நீண்டு கொன்டே போனதே தவிர என் கணவர் சுய நினைவிற்கு திரும்பவும் இல்லை. சிறிது நேரத்தின் பின்னர் அவரையும் சாருவையும் இழுத்தக் கொன்டு நான் என் கால் சென்ற பாதையைக் கடந்தது இங்கே வந்தேன் என்று தன் சோகக் கதையை கூறி முடித்தாள்.

அந்த நல்ல குணம் கொண்ட வியோதிபர், தனக்கு தெரிந்த அன்னைத் தெரேசா மடத்தில் இவ் முவரையும் மறுநாள்; காலை சேர்த்து விட்டார். என்னதான் இருந்தாலும் அடிக்கடி அம்மடத்தில் வைத்து தன் மகன்மாரை நினைவு கூறுவாள். அவர்களுக்காக மன்றாடுவாள் லலிதா.

அன்றொரு நாள் திடீரென்று 2 ஆண்ககளை இம்மடத்தில் சேர்த்திருப்பதாக அருட்சகோதரி கூறியற்கு இணங்க அவள் அந்த அறையை நோக்கி நடந்தான். பிரக்ந்;நை அற்று போனாள். அவ் இருவரும் வேறுயாருமில்ல அவளின் மகன்மார்தான். உடல் முழுவதும் புண்களால் முகம் எல்லாம் வயோதிபத் தோற்றம் கொன்டு வைத்தியசாலையில் கைவிடப்பட்ட நிலையில் இங்கு எடுத்து வரப்பட்டதாக சகோதரி கூறினாள். தாய்மை உள்ளம் இதுதான். மகன் திருடனோ? கொள்ளைக்காரனோ? தாய் தாய்தான் தாய்மையுள்ளம் மாசற்றதுதான்.

இருவரும் தாம் செய்த தவற்றை எண்ணி மனம் வருந்தினர். தாய்மையுள்ளம் கொன்ட அவளோ எதையுமே ஞாபகம் வைத்திருக்காதவள் போல ஆனந்தக் கண்ணீரால் ஆரத் தளுவலானாள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s