திசைமாற்றம் by Devarasa Jeevaraji

“என்னடா இது, மூன்று மணித்தியாலமாய் காத்துக் கிடக்கிறன். இந்தசனியன் பிடிச்ச வஸ்ச காணோம்.”
“ஆ… இந்தாவருது. தம்பிஅந்த வஸ்ச மறிடா அப்பு.”

“ஏறுங்க, ஏறுங்க, கெதில ஏறுங்கஅம்மா”

“கெண்டக்டர் எத்தின மணிக்கு ரவுணுக்குப் போய்ச் சேரும்?”

“ரவுணுக்குப் போக 5 மணித்தியாலம் பிடிக்கும்”

“கொஞ்சம் கெதியாப் போங்க தம்பி”

“அம்மா உங்கட அவசரத்துக்கு நாங்க பஸ் ஓடல. விழுந்திடாம அந்தா, அந்த தொங்கல் சீற் ஓண்ணு இருக்கு, அதிலபோய் இரண்”

“என்ன இந்த ஆட்டம் ஆடுது. குடல் எல்லாம் வெளியில வந்திடும் போல இருக்கு”

“பிள்ள கொஞ்சம் தள்ளி இரம்மா!”

“மாட்டு வண்டில போறனா இல்ல வஸ்சுல போறனா என்டே தெரியல. என்ட தோட்டக் காணிக்க கூட இவ்வளவு பெரிய கிடங்குகள் இல்ல! ம்… எப்ப தான் நிம்மதியான வாழ்க்கை வாழப் போறமோ?”
“இருந்த கொஞ்ச நிம்மதியையும் ஆண்டவன் பறிச்சிட்டான். வீடே வெறிச்சோடிப் போய் கிடக்குது. என்ர மகள,; என்ர செல்லக்குட்டி திவியாவுக்கு பாழாப் போனவங்க யார்ர கண்ணுபட்டுதோ தெரியல. மான் மாதிரி துள்ளித் துள்ளி திரிஞ்சுது என்ட பிள்ளை. யார் தான் பார்த்து ஆசைப்படல அவள்ர வடிவையும் கெட்டித்தனத்தையும்?”
“வகுப்பில எல்லாப் பாடத்திலையும் நிறையமாக்ஸ் எடுக்கிறது அவள்தான். விளையாட்டும் நாட்டியமும் என்டா அவளுக்கு கொள்ளவிருப்பம். அதனாலதான் என்ர சொல்லையும் கேக்காமல் தமயன்மார் இரண்டு பேரும் சேர்ந்து அவள ரவுண் பள்ளிக்கூடத்தில சேத்தாங்கள்”

“நாட்டிய ஆசிரியரா என்ர மகளப் பார்க்க எனக்கும் ஆசைதான். ஆரை மனதோட அனுப்பினன். எந்தப் பாவிமகன் கண்ணுபட்டுதோ… என்ர பிள்ளைக்கு இப்படி நடந்திட்டே!”
“கடவுளே உனக்குக் கண் இல்லையா? கண் இருந்திருந்தா பரீட்சை எழுத முன்னுக்கு உன்னட்ட ஆசீர்வாதம் வாங்க வந்த என்ர மகள்டகாலை உடைச்சிருப்பியா?”
“முள்ளுக்குத்தினாக்கூட தாங்கமாட்டா என்ர செல்லம்! இவ்வளவு பெரியவலியை எப்படித்தான் தாங்கினாளோ? எல்லாத்தையும் விட அவளின்ர சின்னவயசுக் கனவை அழிச்சிட்ட. சின்னவயசில இருந்து தான் நடன ஆசிரியராகத்தான் வரவேணும், என்னுடைய கிராமத்துப் பாடசாலையில் தான் பணியாற்றுவேன் என்று அடிக்கடிசொல்லுவாளே, தமயன்மாரும் எங்கட தங்கச்சியை எப்படியாவது நடன ஆசிரியை ஆக்கிடுவோம் என்று வீராப்பா சொன்னாங்களே இனி எப்படி என்ர மகள் நடன ஆசிரியராக வருவாள்?”
“ஐயோ! கடவுளே! இப்படி எல்லார்ர கனவுலயும் மண்ணை அள்ளித் தூவிட்டியே!அப்பவும் என்ர பிள்ளை எவ்வளவோ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டா எங்கட ஊர் பள்ளிக்கூடத்திலேயே படிக்கிறன் எண்டு! பாவி மகன்கள் கேட்டாங்களா? இப்படி அநியாயமா என்ர பிள்ளையைப் படுக்கையில போட்டுட்டாங்களே”
“நாசமாய்ப் போனவன், அந்தக் கார்காரன் காரோட்டத் தெரியாம என்ர பிள்ளையின்ர காலை உடைச்சிட்டானே அவனுக்குக் கண் குருடு போல. பாவிமகன்! பாவிமகன!; அவன் நல்லாவே இருக்கமாட்டான்.”
“ஐயோ!கடவுளே என்ர மகளுக்கு மயக்கம் தெளிஞ்சப் பிறகு எப்படி அவள ஆறுதல் படுத்தப் போறனோ தெரியலையே என்ர பிள்ளை மனசு ரொம்ப இளசு சின்னனிலையே இருந்து ஒரு கஸ்ரமும் தெரியாமவளர்ந்தவள். அவளுக்க இப்படி ஒரு துன்பமா? ஐயோ! கடவுளே அவளை நான் எப்படி ஆறுதல் படுத்தப் போறனோ தெரியலையே!”
“தம்பி ரவுண்ல உள்ள ஆஸ்பத்தியில இறக்கிவிடு”
“முன்னுக்கு வாங்கம்மா இடம் வந்திட்டு”
“ஆ…! வாரன் வாரன்”
“இறங்குங்கம்மா”
“ஆஸ்பத்திரி எங்க இருக்கோ தெரியலையே! ஏப்பா ஆட்டோக்காரத்தம்பி பெரியாஸ்பத்திரி எங்க இருக்கு?”

“இந்த ரோட் தொங்கலுக்குப் போகணும் நடந்தெல்லாம் போகமுடியாது. கொஞ்சம் தூரம் அம்மா.”
“ஓ……”
“அப்பு என்னைஅந்த இடத்திலவிட்டுவிடு ராசா”

“ஏறுங்க அம்மா”

“தம்பி பாத்து மெதுவாப் போப்பா. வேகமா ஓடினா பத்துப் பதினைந்து நிமிசம் முந்திப் போயிரலாம் எண்டு நினைச்சு பத்து வருசம் முந்தி என்னை மேலே அனுப்பிராத.”
“ஏதாவது பழக்கடையில நிப்பாட்டு தம்பி.”

“ஆஸ்பத்திரி இந்தக் கடைக்குப் பின்னுக்குத்தான் அம்மா இருக்கு”

“அப்ப சரிநான் பழத்தைவாங்கிட்டுப் போறன். இந்தாப்பா காசு”

“ஓ……… இந்த ஆஸ்ப்பத்திரில தான் என்ர மகள் இருக்காளா? நேத்து இருட்டில வந்ததால ஒண்டும் தெரியல. கடவுளே என்ர பிள்ளைய எப்படி சமாளிக்கப் போறனோ தெரியல. என்னப்பார்த்தா ஓ…….. எண்டு அழப்போறாளோ? எப்படி நான் ஆறுதல்படுத்தப் போறனோ?”

“மிஸ் மிஸ் நுவுரு எங்க இருக்கு?”

“இதில இருந்து மூன்றாவதுகட்டிடம் அம்மா”

“சரிமிஸ் நன்றி”

“மிஸ் நுவுரு இதுதானா?”

“ஓம் அம்மா ஆரப் பாக்கப் போறீங்க?”

“என்ரமகள் திவியாவ பாக்கலாமா?”

“பாட்டாவ கழத்திப் போட்டு உள்ளவாங்க.”

“கடவுளே அவளைத் தேற்றிக்கொள்ள தைரியத்தை தா எனக்கு.”

“அம்மா திவியா!”

“என்னம்மா செய்யிது என்ர செல்லத்துக்கு”

“அம்மா வந்திட்டீங்களா?”

“ஏன் அம்மா அழுகிறீங்க?
பாத்தீங்களா அம்மா என்ட கவனக்குறைவால என்ர இலட்சியத்தையே இழந்திட்டன். பாவம் அம்மா அந்த றைவர். பொலிஸ் பிடிச்சிட்டு போயிற்றாங்க. அவருக்கு தமிழும் தெரியாது. அண்டைக்கு அவர்ர வரவப்பாத்து அவங்கட வீட்டில எத்தனை உயிரகள்; காத்திருந்ததோ தெரியாது. இந்த விபத்து எல்லாருக்கும் ஒரு ஏமாற்றத்தை தந்திட்டு. எனக்கு ஒரு கனவிருந்த மாதிரிஅந்த றைவருக்கும் இருந்திருக்கும் அவன்ர கனவு அன்றும் இன்றும் சிறைச்சாலையில புதைக்கப்பட்டுவிட்டது. நம்மட சிறுசிறு அலட்சியச் செயற்பாட்டால் பெரிய இழப்புக்களைச் சந்திக்கவேண்டி இருக்கு.
பாவம் அம்மா அந்த றைவர். ஆவர மன்னித்து வெளியில விட்டுவிடுங்க.”

தாய் மகளை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s