தீபம் அணைந்தது….. by V. Narmitha

அது ஒரு நிலாக்காலம். ஆனால் அந் நிலாக் காலத்தை ரசிக்கவோ அல்லது நிலாவெலிச்சத்தை அனுபவிக்கவோ சிறுபிராணி கூட இல்லையெனலாம். அனைவரும் தத்தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமேகுறியாக இருந்தனர். ஆம் அது இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கும் போர்க் காலம். பசியால் கதறும் குடிந்;தைகளின் அழகுரல்களும், உறவினரைக் காணாது அல்லல்ப்படும் உறவுகளின் கூக்குரலும் அப் பிரதேசமெங்கும் எதிரொலித்தன. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணனைப் போல தன் மேற்பரப்பெங்கும் குண்டு மழை பொழிந்த காரணத்தால் குண்றும் குழியுமாக இருந்;தாள் பூமித்தாய். ஒவ்வொருத்தரும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடிக் கொன்டிருந்தனர். எங்கே எப்பொழுது குன்டுமழை பொழிந்து எத்தனை உயிர்களைகாவு கொள்ளுமோ என்ற ஓர் பெரிய அச்சத்துடனேயே ஒவ்வொரு நிமிடமும் என் வினாடியும் நகர்ந்துகொன்டிருந்தது.

கவியும் இக் கஷ்டமான சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருத்தி. ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு போரில் தனது அன்புத் தந்தையை பறிகொடுத்தவள் அவள். இப்பொழுது நடக்கும் இந்தக் கொடிய யுத்தத்தில் யாரையும் இழந்துவிடக் கூடாது என்று தினம் தினம் ஆண்டவனை வேண்டிக் கொண்டாள். இன்னும் கூட அப்படித் தான்.

“டுமீல்” என்றொரு பயங்கரமான சத்தம் ஆனால் அவர்கனளின் காதுகளிற்கு மிகவும் பரிச்சமான ஒரு சத்தம் கூடாருத்துக்கு அருகிலேயே கேட்டது. கவி தனது தொழுகையில் இருந்து திடுக்கிட்டு களைந்தவளாய் தன் தாயையும் தம்பியையும் நோக்கி வேகமாக ஓடினாள்.

பதுங்கு குழியில் பாதுகாப்பாக இருந்த தாயும் தம்பியும் இவளைக் கண்டவுடன் நிம்மதிப் பெருமூசெறிந்தனர்.

“உள்ளுக்கவாம்மா ஒரே செல் சத்தமாக் கிடக்கு பக்கத்திலதான் எங்கயோ விழுந்திட்டுப் போல கடவுளே ஏன் எங்கள இப்பிடிக் சொதிக்கிறாய்…”
ஏன புலம்பத் தொடங்கினார் கவியின் அம்மா….
“இல்ல அம்மா அது எங்கயோ கொஞ்சம் தூரத்ததான் வெடிச்சிருக்கு நீங்க ஒன்டுக்கும் யோசிக்காதிங்க” என கூறியவாறு பதுங்க குழியில் இறங்கி பாதுகாப்பாக அமந்து கொண்டாள்.
இப்படியான சம்பவங்கள் இன்று மட்டுமல்ல நான்;கு ஐந்து மாதங்களாக நடந்துகொண்டே தான் இருக்கின்றன.
ழூ ழூ ழூ ழூ ழூ ழூ ழூ
ஆம் கவியும் அவளின் அன்புக் குடும்பமும் பச்சை வயல்கள் முற்றும் சூழப்பட்ட எந்த விதத்திலும் குறை கூற முடியாத அளவுக்கு சிறந்து விளங்கிய விவசாய பூமியான நெடுங்கேணி பகுதியில் ஓர் சிறிய வீட்டில் அமைதியாக வாழ்ந்தவர்கள் தான். அமைதியான காட்டில் புயல் இடிப்பதை போன்ற தமது தந்தையை 98 காலப்பகுதியில் இடம் பெற்ற ஒரு குண்டு தாக்குதலின் போது இழந்ததன் பிற்பாடு அடுத்தவேளை உணவுக்கே வழி தெரியாமல் திண்டாடியபோது கவி தனது உயர் படிப்பைக் கைவிட்டு ஓர் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். அதன் பிற்பாடு அவர்களது குடும்ப நிலை வழைமக்குத்திரும்ப நிம்மதியான ஓர் வாழ்வையே வாழ்ந்தனர்.

கவிக்கு இரண்டு கனவுகள் தான், தன் தாயை எவ்விதமனக் கவலையும் இன்றிபாதுகாக்க வேண்டும். தன்னால் தொடர முடியாத இடையிலே நின்று போனஉயர் கல்வியை எவ்வித இடையுறும் இன்றி தன் தம்பி கற்கவேன்டும் என்பதே தனக் கொன்று ஒருஆசையைக் கூட மனதில் வரவழைத்துக் கொள்ளாதவள் கவி. இவ்விருகனவுகளையும் ஓரளவு இல்லை. கணிசமான அளவு நிறைவேற்றுவிட்டாள். ஆம் அவளது அன்புத் தம்பி கொழும்புப் பழ்கலைக் கழகத்தின் சட்டத் துறை மாணவன். இவ் மாதம் அவனது பட்டமளிப்புவிழா முடிந்துவீட்டிற்கு வந்தான்.
வந்தவன், “அக்கா அக்கா எங்க நிக்கிறீங்க?”

“ஏன் தம்பி இங்கதான் நிக்குறன் ஏன் வந்து முகம் கூட கழுவாமல் என்னத் தேடுறாய்…?”

“அக்கா எனக்கு பட்டமளிப்பு விழா முடிஞ்சுட்டு வாற கிழமை புதுக்குடியாருப்புல போய் வேலைல சேரனும். பிறகு பாருங்கோ உங்கள் ரெண்டு பேரையும் எப்படி மகாரானிமாரி நடத்துறன் எண்டு…”கவி தனக்குள்ளேயே மகிழ்ந்தவாறு தம்பியை ஓடிப்டிபாய் அனைத்தாள், அவளின் ஆசைத்தம்பி இனி ஒரு சட்டத்தாணி என்பதில் கொள்ளை இன்பம் அவளுக்கே.

இந்தநேரத்தில் தான் இக் கொடுரமான இடம்பெயர்வும் நடந்தது. கடவுள் ஏன் இவ்வாறு எங்களை சோதிக்கிறான். ஏன நொந்தவாறே தமது சொந்த ஊரை விட்டு முள்ளிவாய்க்காலில் ஒரு கட்டாந்தரையில் மக்களோடு மக்களாக சிறிய கூடாரம் ஒன்று அமைத்து வசிக்கின்றனர்.

இதுவும் எத்தனை நாளுக்கோ என எண்ணிக் கவலை கொண்டாள் கவி. ஏனிந்த பாழாய்ப் போன யுத்தம். ஒரு இனத்தை அழிக்க ஏன் இன்னோரு இனம் இவ்வளவு முனைப்பாக இருக்கின்றது. அன்று மண்ணாசையின் விளைவாக ஒரு பாரத யுத்தம் நடந்தது. இன்னும் மண்ணாசைக்காகவும், இன வெறியாலும் இன்னொரு யுத்தமா? கடவுளே என் அம்மாவையும், தம்பியையும் எப்படியாவது காப்பாற்று, இந்தக் கொடிய யுத்தத்திலிருந்து எப்படியாவது அம் மக்களைக் காப்பாற்று என இறைஞ்சினாள். ஆனால் அவ் இறைவனாள் தான் இவ் யுத்தத்தை தடுக்க முடியாது போய் விட்டதே.

ழூ ழூ ழூ ழூ ழூ ழூ ழூ

சிறிது நேரத்தின் பின்னர் ஒரு சிறிய கவி மெல்ல வெளியே எட்டிப் பார்த்தாள். எல்லோரும் அவ் விடத்தைவிட்டு நகர்ந்துகொண்டிருந்தனர். உடனே கவியும் தனது தாயையும் தம்பியையும் அழைந்தவாரு கூடாரத்தைப் பிரித்தும் பிரிக்காமலும் தமது சில அத்தியாவசிய உடைமைகளை மட்டும் எடுத்தபடி மக்களோடு மக்களாக நடக்கத் தொடங்கினர்.

மாத்தளன் வரை சென்ற அவர்களது அப்பயணம் அங்கேயே ஸ்தம்பித்தது.

“இங்கயே இருப்பம் இஞ்ச சேல் வராது போலகிடக்கு”

எனக் உறியவாறு பலர் கூடாரத்தைக் கூட சரிப்படுத்தாது தம்முயிரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் பதுங்;குகுழியைதொட்டத் தொடங்கினர்.

கவியும் தம்பியும் இணைந்து அவர்களுக்கு போதுமான ஒரு பதுங்குகுழியைதெட்டிவிட்டு கூடாரத்தை சரிப்படுத்தினார். அப்பொழுது நிவாரணம் வழங்கப்படுவதாக கூறி பலர் செல்லத் தொடங்கிய போது தமது உணவுத் தேவையைகருத்திற் கொண்டுகவியும் செல்லத் தயாரானாள்.

“நீ போக வேனடாம் கவி பேசாம இரு” என தடுத்தாள் அவள துதாய்.

“இல்ல அம்மா உதுல கிட்டத்தான் பிறகு சாப்பாடுக்கு என்ன செய்ய எங்களிட்டயும் ஒண்டும் இல்லயே டக்கென்டு போட்டுவாறன் நீங்கள் தம்பியோட இருங்கோ” எனக் கூறியவாறு குடும்ப அட்டயை எடுத்தபடி வெளியேவந்த கவி தன் தாயிடம் இருந்தவிடைபெற்று இரண்ட மூன்று அடிகள் தான் நடந்திருப்பாள். ஒரு பெரிய சத்தம் கவிக்கு மிக மிக அருகிலேயே கேட்டது. அப்படியே அசைவற்று உணர்வற்று கீழே விழுந்தாள். அவள் சிறிதுநேரத்தின் பின்னர் அவள் ஒருபாயில் உயிரற்ற ஜடமாக படுக்கவைக்கப்பட்டிருந்தாள். அவளது அம்மா தலையிலே பலமாக அடித்தடித்து அழுது கொண்டிருந்தாள். தம்பி கண்களில் கண்ணீர் பழையாகப் பொழிய “அக்கா அக்கா”எனக் கதறிய படி கவியை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் கவியோ யாராலும் தட்டி எழுப்ப முடியாத ஓர் உயிர் சென்றுவிட்டாள்.

ஆம், இனி அவளுக்கு ஒரு சிறிய குன்டுச் சத்தமும் காதில் விழாது. தன் தாயின் ஒப்பாரியும், தன் அன்புத் தம்பியின் கதறலும் கூட காதில் விழவே விழாது. அவள் போய் விட்டாள். அக் கொரே யுத்தபூமியில் தினம் வாடிவிழும் பூக்களில் பூவாக, தினம் தினம் அனையும் தீபங்களில் ஒருதியாக, தீபமாக அவள் அணைந்து போய் விட்டாள்.
– முற்றும் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s