பாசம்…… by Suki Kavin

சூரியன் தன் கதிர்களை புவி மீது பரப்பும் பரபரப்பான காலை வேலையில் கவிதா பரபரப்பாக வெளிகிட்டு தனியார் கல்வி நிலையம் சென்றாள். அவ்வூரில் புகழுடன் வாழும் நடுத்தரக் குடும்பத்தில் வாழ்ந்த கவிதா ஆரம்பத்தில் படிப்பில் புலியாக காணப்பட்டாள். அவளது ஒரே நோக்கம் புலமைப் பரிசில் மூலம் வெளிநாடு சென்று படிப்பதே ஆகும்.

படிப்பு மட்டுமே என்று வைராக்கியத்துடன் வாழ்ந்த அவளின் மனதில் கண்ணன் என்ற ஒருவரின் நட்புக் கிடைத்தது. இருவரும் நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் ஒன்றாக படிப்பவர்கள். அவர்கள் இருவரின் நட்பும் நாளடைவில் காதலாக மாறியது. கல்வியில் மன வைராக்கியத்துடன் இருந்த கவிதாவின் மனம் நாளடைவில் இளகத் தொடங்கியது.

லலிதா தன்னுடைய தந்தை படும் துன்பங்களை உணர்ந்து ஓரளவு படித்து வந்தாள். எனினும் அவளுக்கு தந்தைப்படும் துன்பங்களை விட கண்ணனின் காதலே பெரிதாக மாறியது.

ஆரம்பத்தில் படித்த படிப்பை வைத்து அவளுக்கு பரீட்சையில் நல்ல பெறுபேறு வந்தது. அவள் முதலே லண்டன் பழ்கலைக்கழகத்திற்கு விண்;ணப்பித்திருந்ததாள். லண்டன் செல்வதற்கான வீசா தபாலில் வீட்டிற்கு வந்ததும் கவிதாவின் அம்மா மிகுந்த சந்தோசத்துடன் வீசாவினை பத்திரமாக அலுமாரியினுள் எடுத்து வைத்தான்.

கவிதாவுக்கு கண்ணன் மேல் இருந்த காதல் அதிகமாக இருவரும் கோவில், கடற்கரை எங்கும் சுற்றி திரிந்தார்கள்.

இந்த விடயம் கவிதாவின் வீட்டுற்கு தெரிய வந்ததும் அவளது தந்தை கடும் சொற்களால் திட்டி அவளை வீட்டை விட்டு வெளியேற விடாது தடுத்தார். எனினும் கண்ணனின் நினைவுகளுடன் கவிதா அழுதவாறு வீட்டில் இருந்தாள்;.

அவளது மேற்படிபுக்கு லண்டன் செல்ல அவளது தந்தை எல்லா ஏற்பாடுகளையம் செய்தார். கவிதா தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் கண்ணனோடு தொலைபேசியில் உரையாடி வந்தாள். கண்ணனை விட்டுப் பிரிந்து வெளிநாடு செல்ல விரும்பாத கவிதா வீசாவை கிழித்து எரிந்தாள். இதனை அறிந்த கவிதாவின் தந்தை கவிதாவின் கன்னத்தில் அறைந்தார். தன் மகளை வெளிநாடு சென்று படிக்க வைக்க வேன்டும். என்ற தன்னுடைய கனவு வீணாகிப் போனதை எண்ணி வருந்திய கவிதாவின் தந்தை அந்த இரவே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்

தந்தையின் இந்நிலைக்கு தான் காரணம் என்று உணர்ந்த கவிதா தனது காதலை துண்டிக்க முடிவெடுத்தாள். அதற்காக தந்தையின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள். மகளின் மேல் இருந்த அதீத பாசத்தால் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

வைத்தியசாலையிலிருந்து வீடு வந்த தந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்தாள். தந்தைக்கு வேன்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்தாள். தந்தை நல்ல நிலைக்கு வந்ததும் நகரில் உள்ள பிரபல வங்கி ஒன்றுக்கு வேலைக்குச் சென்று அங்கு கணக்காளராக பணி புரிந்தாள்.

ழூ ழூ ழூ ழூ ழூ ழூ ழூ

ஒரு நாள் திடீரென்று கண்ணனை சந்திக்க கவிதாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. கண்ணன் தன்னுடைய காதல் அம்பை பார்வைகளால் கவிதாவுக்கு வீசினான். எனினும் கவிதா தன்னடைய அப்பாவை மனக்கண் முன் கொண்டு வந்து அவனது காதலை ஏற்க மறுத்தாள்.

கவிதாவின் மீது பைத்தியமாக காதல் கொண்ட கண்ணன் கவிதாவின் நினைவாக பித்துப் பிடித்தவன் போல அலைந்தான். எனினும் கொஞ்சம் கூட மனம் மாறாமல் இருந்தாள். இதனால் கண்ணன் தன்னுடைய வீட்டில் சம்மதம் பெற்று அவனுடைய தாய் தந்தையினை அழைத்துக் கொண்டு கவிதாவின் வீட்டுக்கு பெண் கேட்கச் சென்றான். ஆரம்பத்தில் கவிதாவின் தந்தை மறுப்புத் தெரிவித்திருந்தாளும் இறுதியில் சம்மதம் தெரிவித்தார்.

கண்ணன் செல்வந்த வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் என்பதாலும் ஒரே ஒரு மகன் என்பதாலும் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணச் சடங்கின் செலவுகள் அனைத்தையும் கண்ணனின் குடும்பம் ஏற்றுக் கொண்டது. திருமணத்தின் பின் கவிதா வேலைக்குச் செல்வதை நிறுத்தினாள். அதன் பிறகு வீட்டு வேலைகளைச் செய்வதயும் கண்ணனின் தாய் தந்தையை பராமரிப்பதையும் தன்னுடைய தொழிலாக கொண்டாள். திருமணத்தின் பின் ஒருவருடத்தில் இடையிடைய சில ஊடல்கள் இருந்தாலும் சமகமாக வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள்.

ழூ ழூ ழூ ழூ ழூ ழூ ழூ
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஆடைகள், இனிப்பு வகைகள் என்பன வாங்கிக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கு மதிய உணவு உண்ட பிறகு தந்தை “சின்னவளுக்கு நல்ல வரன் வந்திருக்கு ஆனால் பணம் தான் பிரச்சனையாக இருக்கிறது” என்று கூறினார். எனவே தந்;தைக்கு எப்படியாவது பணம் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வீடு திரும்பினாள்.

வீடு சென்ற கவிதா கண்ணனிடம் “தங்கைக்கு நல்ல வரன் வந்திருக்கு பணம் கொஞ்சம் போதாமல் இருக்கிறது கொஞ்சம் பணம் கடனாக அப்பாவுக்கு கொடுப்பீங்களா?” என்று கேட்டாள். இதனால் கோபம் அடைந்த அவன் “நான் உன்னை வரதட்சனை இல்லாமல் திருமணம் முடித்தேன். உன் தங்கைக்கு கூட வரதட்சணை வழங்க முடியாத ஏழையா உங்கப்பன்” என்று கேட்டான். தன் தந்தையை இழக்காரமாக பேசியதால் கோபமுற்ற கவிதா கண்ணனை திட்டினாள். “இருவருக்கிடையில் சண்டை வலுப்; பெற்றது” அதீத கோபம் கொண்ட கண்ணன் கவிதாவை சுவருடன் தள்ளி விழுத்தியதும் அவளின் தலை பலமாக இடிபட்டது. அவள் அப்பா என்று கதறி கதறி அழுதாள். அவள் கத்தும் சத்தத்தை கேட்க விரம்பாமல் வீட்டை விடடு வெளியே சென்று விட்டான். தலையில் பலமாக இடிபட்டதால் இரத்தக்கழிவு ஏற்படடு தரையில் விழுந்தாள். பல மனி நேரத்தின் பின் வீடு திரும்பிய கண்ணன் ஓடி வந்து கவிதாவை கட்டிப் பிடித்து “எழும்பு கவிதா, கவிதா எழும்பு….” என்று கத்திய அவன் ஒரு கணம் கவிதாவின் உடலை சோதித்து பார்த்த போது உயிரற்று கிடந்த அவளை நெஞ்சார கட்டித் தழுவி வீர்…. என்று கத்தினான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s