மீண்டும் உதயமாகும் உறவுகள் by Ramlar Fathima Atheeka

வீதியின் மத்தியில் நடப்பட்ட கம்பங்களில் முத்துக்கள் போல ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்குகள் கண்களை கவர்ந்திழுத்தது. மனிதர்கள் மனமகிழ ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். அன்றுதான் வருடத்தின் ஆரம்பத்திற்காக நிமிட முட்களின் அநசவை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அந்தநேரமும் நெருங்கிக் கொண்ருந்தது. நத்தையின் வாகனங்களில் புதுவருட வரவேற்பிற்காக அலங்காரதோரணைகளை ஏற்றிச் சென்றனர். முட்டிமோதிக் கொண்டு மூன்று மணிநேரமாக போராடிஇஎன் பூர்வீக வீட்டை அடைந்தேன்.
வீட்டினுள் நுழைந்தபோது எதோ கீழே விழுவது போலத் தென்பட்டது. விரைந்து “சட்டென்று” ஓடிப்பார்த்தேன். நான் பிறப்பிலிருந்தே மடி சாயாத என் அன்னையின் “போட்டோ” கீழே கிடந்தது ‘சட்டென்று’ கண்ணீர்; கொட்டியது. என் நினைவு திரும்பியகாலம் வரை என் அம்மாவைக் கண்டதில்லை. உறவினர்கள் “அவளா! இருக்கிறாள், என்ன இடமோ! தெரியல்ல உன்னை விட்டுப் போனவள் எதற்கு” என்று பேசுவார்கள.; நான் இப்போது நல்ல நிலமையில் தான் இருக்கின்றேன். ‘எதற்காக என்னைவிட்டுச் சென்றார்கள் என் பெற்றோர்கள்’ தெரியவில்லை.
சிறிதுகாலத்திற்கு முன்புதான் நான் தங்கப் புஷ்பத்தின் மகனாகப் பிறந்தேன். என்னை தங்கமகனாக பார்க்கவேண்டிய என் தாய் தகப்பன்மாரே! என்னை வெறுத்து ஒதுக்கினார்கள். எனக்கு அப்போது ஆறு மாதமாகிவிட்டது. அடிக்கடி என் உடலில் ஏதோ! ஒருவிதமான காய்ச்சல் வருமாம். அதனால் நிறையபணம் செலவு செய்தும் என் காய்ச்சல் குணமடையவில்லையாம். பால் மணம் மாறாத என் பிஞ்சு முகத்தைப் பார்த்துவிட்டு. என் தகப்பன் “என்னாடி இது தினமும் வருத்தம் எண்டாஇ பிச்சைக்குத்தான் போகனும் டி”என்று என்னை தூற்றினார்கள்.
ஏதோ! பெத்த பாவத்திற்கு வளர்ப்போம் என்றுஎன் தாய் கூறினாளாம். அந்த சந்தர்ப்பத்தில் தான் என் காய்ச்சல் குணமடையத் தொடங்கியது. என்னை “அட்மிட்”பண்ணி இருந்த வைத்தியசாலையில் ஏதோ! ஒரு குழந்தைக்கு இதயம் தேவைப்பட்டதாம் அதற்காக என்னை பலியாக்க முடிவெடுத்தனாஇ; என் பெற்றோர்கள். காரணம்இ கஷ்டப்படும் எம் குடும்பத்திற்காக ஒருவாய்ப்பு கிடைத்தது. “ஒருகுழந்தை இல்லாவிட்டால் மற்றைய குழந்தை”என்று உயிருடன் இருக்கும் என்னைஎ ன் தகப்பன் கோடிக் கணக்கில் பேரம் பேசினார்.
அந்தசமயத்தில் என்னை பத்து மாதம் சுமந்த என் தாய் கூட மறுக்கவில்லையாம். அதனால் என் சொந்த தங்கை என்று கூட பார்க்காமல் என் மாமா “இன்னும் இவள் இக் குழந்தையை ஏதாவது செய்துவிடுவாள்” என்று வீட்டை விட்டுதுரத்தி அடித்தார். நான் என் மாமாவின் அரவனைப்பிலேயே! வளர்ந்தேன். இப்போது என் மாத வருமானம் தலைக்கு மோலாக போகின்றது. நான் அடிக்கடி நினைப்பதுஎன் தாய் தகப்பன் என்னை சிறப்பாக கவனித்து கைவிடாமல் இருந்திருந்தால்இ இன்றுஎவ்வளவுசந்தோஷம் என்று, என்னதான் மாமா என்னை வளர்த்தாலும் என் சம்பளத்தில் புடவையும் வேஷ்டியும் வாங்கிக் கொடுத்து அவர்கள் கட்டுவதைப் பார்க்க எவ்வளவு சந்தோஷம்.

அந்தநேரத்தில் புதுவருட விடுமுறை அதற்காகநான் என் பூர்வீகவீட்டை தெரிவுசெய்தேன். சரி என்று நன்றாக குளித்துவிட்டு புதுவருட வரவேற்பிற்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால்இ என் உறவினர்கள் அங்கு இல்லை தனிமையில் தவித்த போது பழைய நினைவுகள் படிப்படியாக வேகமாக வீசியது. எவ்வாறாயினும் ‘என் பெற்றோர்கள் என்னைத்தேடி இவ்வளவு நாட்களாகியும் வரவில்லை’என்று ஏக்கம் உருக்கிக் கொண்டிருந்தது.

ஏதோ! தெரியவில்லை ஏதோ நடக்கப்போகின்றது போன்று தென்பட்டது. வீட்டு முற்றத்தில் என் தாயின் போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தேன.; புதுவருட வரவேற்பை காத்துக் கொண்டிருந்த வேளையில் யாரோ ஒரு வயோதிபப் பெண்மணி கையேந்திநின்றாள். அருகில் சென்றபோது எங்கோ……பார்த்த முகம் போன்றுதென்பட்டது. அவள் “ஐயா! எனக்கு இந்த புதுவருடத்திற்காக ஏதாவது தாங்களேன் என்றுகேட்டாள். உடனே போட்டோ வை கட்டில் வைத்து விட்டு என் தாய்க்கு வேண்டிவைத்திருந்த புடவைக் கொடுத்தேன். வேண்டிக் கொண்டே தண்ணீர் தாருங்கள் என்றாள் எடுக்க உள்ளே சென்றேன். அந்தசமயம் களைப்படைந்த பெண்மணி கட்டில் அமர்ந்தாள்.

அருகில் இருந்த போட்டவை எடுத்துப் பார்த்தாள.; அதனை பார்த்தவுடன் அழுதுவிட்டாள். நான் தண்ணீரைக் கொடுத்தேன்இ குடித்துவிட்டு தயக்கத்துடன் “ஐயா! இந்தப் போட்டோ என்றுகேட்டவுடன் நான் விரைந்து என் தாயைத் தெரியுமா? எங்N;க இருக்காங்கஇ என்று கேட்டேன். என்ன? இது உன்னுடைய தாயா! ஐயா! நான் தான் உன்னுடைய தாய்”என்று கூறியவுடன் சிலநிமிடங்கள் தடுமாறி நின்றேன். கட்டியணைத்து அம்மா! அம்மா! என்று அழுதுபுலம்பினேன். எங்கே? என் அப்பா என்றுகேட்டேன் “அவர்……இஅவர் இறந்துவிட்டார். உனக்கு நாங்கள் செய்த பாவத்திற்கு எங்கள் இருவருக்கும் சரியான தண்டனை கிடைத்தது. பணத்திற்காக விற்க நினைத்த உன்னிடமே இறைவன் கையேந்த வைத்துவிட்டான்”என்று மன்னிப்புக் கேட்டாள். நானும் மன்னித்துவிட்டுஎன் தாயை ஏற்றுக் கொண்டேன்.
புதுவருடபிறப்பிற்கான அலாரம் ஒலித்தது நானும் என் தாயும் புதுவருடத்தை வரவேற்றோம். அதனோடு என் வாழ்வே ஒளிமயமாகியது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s