வடபோச்சே by S. Dharmaseelan

“கண்மூடித்திறக்கும் போது…கடவுள் எதிரே வந்ததுபோல…”என்றபாடல் உச்சத் தொனியில் கேட்டது. அதனையும் மீறும் வகையில் “நல்லகாலம் பொறந்திரிச்சி நம்மோட கஷ்டம் எல்லாம் தீந்திருச்சி”என்றபாடல் குமாரின் காதில் விழுந்தது.
அப்பாடலின் இரைச்சலினால் சினமுற்றகுமார் ஜன்னலின் வழியேஎட்டிபார்த்தான். அதுதேர்தல்காலம.; சுவர்களுக்குபோஸ்டர் ஆடை அணிவிக்கப்பட்டுவர்ணக்கொடிகள் வரவேற்பு அளித்தன.பெரிய போஸ்டர் ஒட்டப்பட்டு ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட வேன் ஒன்று ஊர் மக்களுக்கு ஒளிமயமான வாழ்வைதரப் போவதாகக் கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்த வண்ணம் ஆமை வேகத்தில் ஊருக்குள் வந்தது.
பயணித்த பிரதான பாதையின் தன்மையினாலேயே அது ஆமையாக நகர்ந்தது. குண்டும் குழியுமாக நீர் தேங்கிக் கிடந்தது அப்பாதை. “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” என்பது போல நல்ல பாதையினைத் தேடி அழைகின்றது அந்த ஆமைவாகனம்.
அது ஓர் இடத்தில் தரித்து நின்றது. அவ்விடத்தை நோக்கி ஊர் மக்கள் விரைந்து சென்றனர். வெள்ளை வேட்டியும் வெள்ளைசேட்டும் அணிந்த சில மனிதர்கள் அதில் இருந்து இறங்கினர். கூடியிருந்த மக்களுக்கு கைகூப்பி வணக்கம் கூறினர். அந்த கூட்டத்திலே ஒருவர் மாத்திரம் மற்றவர்களை விட உடையிலும் பாவனையிலும் வித்தியாசமாகத் தோன்றினார். நெற்றியில் போட்டிருந்த பெரிய நாமம் நன்றாய்ப் பளிச்சிட்டது. அவர் பெயர் ராமகிருஸ்ணன். இம்முறை தேர்தலில் போட்டியிடும் அயல் கிராமத்துப் பெரும்புள்ளி.அவருடைய சிறந்த தொண்டர்களில் கும்பிடுரேன் சாமியும் ஒருவர். தேர்தல் பிரச்சாரவாகனத்தை கண்ட குமாரும் அவ்விடத்திற்கு விரைந்தான். செல்லும் வழியில் தன் வீட்டிற்கு எதிரே உள்ள மசாலாகடையில் கண்ணகியிடம் இரண்டு வடை வாங்கினான். ஒரு வடையை வாயில் கடித்துக்கொண்டு இன்னொன்றை கடதாசியில் சுத்திப்பிடித்தவாறு ஓடினான். அவன் ஒரு பருப்புவடைப்பிரியன்.
“ஐயோ!அம்மா” எனக்குமார் கத்தியசத்தம் கேட்டுப்; பதறியகண்ணகி “என்னடாகுமார் என்னாச்சி” என்றாள். “ஒண்ணும் இல்ல கண்ணு, ரோட்டில கிடந்த கல்லு கால்ல இடிச்சுட்டு.” என்றான்குமார்.
“போடா இவனுங்க இந்த ரோட்ட செஞ்சிதாற மாதிரியும் இல்ல சம்பளத்தை கூட்டிதாற மாதிரியும் தெரியல. தீபாவளி வேற வந்திரிச்சி வடபலகாரம் செய்யணும். எந்த மூஞ்சவச்சிக்கிட்டு ஓட்டுகேக்க வரானுங்களோ” என்று நெட்டி முழங்கினாள் கண்ணகி.
அவள் கூறியதை கேட்டுக்கொண்டே அப்பாதையில் கவனமாக நடக்கத் தொடங்கினான் அவன்.உச்சிவெயில் தலையைச்சுட்டது. மதியநேரம் ஆகையால் வேலை முடிந்துவெற்றுக் கூடையைச் சுமந்தபெண்களும் வியர்வையில் குளித்துக் கறுத்த ஆண்களும் அந்த இடத்தை நோக்கிசென்றனர்.
அவ்விடத்தை அண்மிக்கும் வேளையில் ஒலிபெருக்கியின் சத்தத்தைவிட“தலைவர் வாழ்க…தலைவர் வாழ்க” என்ற கோசமே அதிகமாகக் கேட்டது. விசில் சத்தத்திற்கும் குறைவில்லை. இந்நாடகம் அரங்கேறிமுடிய எங்கும் நிசப்தம் மயான பூமியின் வாடைதென்பட்டது.
“எனது உயிரினும் மேலான தொண்டர்களே!”என திடீர் எனப் பேச ஆரம்பித்து “என்உயிர் உள்ளவரை உங்களை மறக்கமாட்டேன் இந்த உயிர் உங்களுக்காகத்தான்” என்று உரத்தகுரலில் அனல் பறக்கப் பேசினார் தலைவர். மக்களும் கைகளைத் தட்டினர். இந்த பிரச்சார அலை மலை ஏறுகையில் குமார் கும்பிடுரேசாமியை பார்க்கிறான்.
“சாமி அண்ணா களத்தில எறங்கிட்டிங்கபோல”
“காலம் வந்தா சேத்தில காலைவச்சிதானே ஆகனு குமார்”என்றான்சாமி.
“அதுசரி இப்ப எப்படிபோகுது இலக்சன் வேலை எல்லாம்”
“அது போகுதப்பா”
“ஏன் அண்ணே தப்பாபோகுதா”,
இல்லஅப்பநல்லபடியா போகுதுண்ணு சொன்னே. உன்னால முடிஞ்சா சில டிக்கட்டுக்கள தள்ளிவிடு. பிறகு பார்த்து கவனிப்போம்”.
சரிஅ ண்ணே! இந்த வடைய சாப்பிடுங்க என்றுகையில் இருந்த வடையை நீட்டினான்.
“குமார் இந்த வடையை நீதார ஓட்டுனுநெனச்சிக்கவா குமார்”
“கட்டாயம் அண்ணே, வடைதான் ஓட்டு” என்றான் குமார். வடையை சாப்பிட்டசாமி
“என்னடாகுமார் வடை ஒரு மாதிரி இருக்கு. வேகல,. ஊறப்போடலயா”
“அப்பிடித்தான் போலஅண்ணே. போட வேண்டிய தண்ணில போட்டா வடை நல்லா வந்திருக்கும்”
“சரியா சொன்னாய் குமாh.; நம்ம ஆளுங்களுக்கு காட்ட வேண்டிய தண்ணிய காட்டினா ஓட்டும் வடை மாதிரிஒட்டு மொத்தமாவிழும்”என்றான் சாமி.
“அண்ணன் தண்ணி காட்டுறத விடலபோல..பாத்து அண்ணே, அன்னைக்கியாரும் தண்ணி காட்டிரப்போறாங்க”.
“ஆமாம். கவனமாத்தான் இருக்கணும.; சரி குமார் எனக்;குக் கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டுவாறன்” என்று கும்பிடுரசாமி விடைபெற்றுக்கொண்டார். குமாரும் தான் வந்த வழியேநடையைக் கட்டினான். கால் தடுக்கிய இடத்தில் கையில் இருந்த வடை கீழேவிழுந்திருந்ததைஅப்போதுதான் பார்த்தான். வடையைக் கண்டதும் அம்மா கூறிய பழையபாட்டிக் கதை ஞாபக்திற்கு வந்தது. ‘பாட்டி சுட்டதைக் காகம் திருடிச் சென்றதாம் அதைக் கண்ட நரி காகத்தை பாடச் சொல்ல வடை கீழே விழுந்தது அதை நரிதூக்கிச் சென்றது. காகம் ஏமாந்து போனதாம்’;. இக்கதையை மனதில் நினைத்துக் கொண்டுவருகையிலே அப்பாவின் புதிய கதை எட்டிப்பார்த்தது.
‘நரி காகத்தைப் பாடச்சொல்லவே காகம் வடையை காலில் வைத்துக் கொண்டுபாடியது. நுரி ஏமாந்துபோனது.’ இரண்டையும் எண்ணிப்பார்த்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் குமார்.ஆனால் இரண்டு முறையும் பாட்டி ஏமாந்ததைப்போல கடந்தகாலத் தேர்தல்களில் மக்கள் ஏமாந்ததை எண்ணிக் கவலையடைந்தான்.
நாட்கள் கடந்துபோகவாக்களிக்கும் தினமும் வந்தது. அந்நதத் தேர்தல் திருவிழாக் கலாத்திலே மக்கள் பெரு வெள்ளமாய்த் திரண்டு எப்போதாவது எட்டிப்பார்க்கின்ற பள்ளிக்கூடத்திற்குப் படையெடுத்தனர். வாக்களிப்பு நிலையத்தை அண்மித்த முச்சந்தியில் அன்றுவடை வியாபாரம் சூடுபிடித்திருந்தது. அந்தகடைக்குப் பின்புறமாய் இருந்து ஒருவன் தள்ளாடியபடியே வந்து கடைக்காரரிடம் “ஏப்பா உழுந்துவடை இருக்கா” என்று கேட்டான். “இல்லையே தம்பி பருப்புவடை மட்டும்தான் போட்டிருக்கேன்”என்றான். தள்ளாடியபடியே அந்த குடிமகன் இருந்த இடத்திற்கு சென்றான். குமாரின் பர்வையும் அங்குபதிந்தது. கடைக்குப் பின்னால் அதிகசனக் கூட்டம.; தேனீருக்குப் பதிலாக ஏதோ ஒன்றைக் குடித்தபடியும் வடையைக் கடித்தபடியும் இருந்தனர்.
குடிமகன்களில் ஒருவர் “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் .அந்தக் கடையில பருப்புவடை மட்டும்ம தான் விக்கிறாங்க தீந்து போன உழுந்துவடைய யார் கொண்டு வந்தது.”
அடே! நம்ம தலைவரு இஸ்பெசலா நமக்கு அனுப்பின ஓட்டபோட்ட உழுந்துவடை என்றான் மற்றவன்.
‘பாருடா நம்ம எல்லாம் ஓட்டு போடுறத மறந்து போயிருவோம்னு அவரே ஓட்ட…போட்ட உழுந்துவடைய அனுப்பிருக்காரு அவரு தாண்டா தலைவரு”
இதனை அவதானித்த குமார் மனதுக்குள் சிரித்துக் கொண்டு வாக்களிக்கும் நிலையத்திற்கு சென்று வரிசையில் நின்றான். வடையை வாயில வைத்துக்கொண்டு இரண்டு போலீஸ்காரர்களும் வரிசையை ஒழுங்குபடுத்தினார்கள்.
அவனுடன் சென்ற ஏனையவர்களும் வாக்களித்துவிட்டு ‘தேனீர்’ போதையிலே தள்ளாடி படியே வீடுசென்றனர்.
மறுநாள் காலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தன. கண்ணகியின் கடையில் வடைசாப்பிட்டுக்கொண்டு தேனீர் குடித்துக்கொண்டிருந்தான் குமார். அவனுடைய சொந்த ஊர் தேர்தல் முடிவுகளைக் கேட்டவுடன் சற்றுக் குழம்பிப்போனான் .வெற்றிபெற்றவர் முகம் தெரியாத முகவரி இல்லாத ஒரு பெரும் புள்ளியாம்.
இந்தநேரத்தில் கும்பிடுறசாமியும் வந்துசேர்ந்தாh.; “என்னா குமார் இன்னைக்கி உழுந்துவடை சாப்பிடுற”என்றுகேட்டான். உள்ளுர் பருப்புவடை காணாமல் போச்சு. வெளியூர் உழுந்துவடை நம்மளப் பயன்படுத்திக் கொண்டது என்று நினைத்து நிதானத்துக்கு வந்த குமார் “கண்ணகி! அண்ணனுக்கு பிளேன்டியும் வடையும் கொடு”எறான்.
“என்ன அண்ணே இப்படி போயிரிச்சி நெலம”என்றான் குமார்
“அடே இது எல்லாம் அரசியலில சகஜமப்பா” என்று சொல்லிக்கொண்டே தேனீரைக் குடித்தான் சாமி. “என்ன காரணம் அண்ணே! இப்படி போறதுக்கு”
“அட நம்மாளவிட இந்தாளு நம்ம ஆளுங்களுக்கெல்லாம் தண்ணிய காட்டிப்புட்டான்”என்று கூறிக்கொண்டு தட்டிலிருந்;து வடையை எடுத்தான். கும்புடுரேசாமி.
அவன் சரியாக பிடிக்காததினால் அந்த வடை கீழே விழுந்தது.
“ஐயோ! குமாரு வடபோச்சே” என்றான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s