விடுதி……..! by M. Padmini

திடீரென்று கேட்ட சத்தத்தில் அருந்து விழித்துக் கொன்டாள் காந்தி.

அந்தச் சிறுவர் விடுதியிலிருந்த ஏனையை சிறுமிகளும் தூக்கக் கலக்கத்திருந்து விடுபட்டுக் கொன்டிருந்ததனர். அந்த சிறுவர் விடுதி கிறிஸ்தவர்களால் நடாத்தப்பட்டு வருகின்றது.

புதிதாய் அங்கு சேர்க்கப்பட்ட சிறுமி அழுகையை நிறுத்திய பாடில்லை. வெளியில் எழுந்து வந்த காந்தி அதனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு இங்கிருக்க ஏலாது, என்னையும் உங்க கூடவே கூட்டிக் கொண்டு போங்க” என அழுது துடித்துக் கொன்டிருந்தாள்.

அச்சிறுமியும், காந்தியைப் போலவே தாய், தந்தையை இழந்தவுடன், உறவுகளால் இங்கு கொண்டு வந்து தள்ளப்பட்டவள்தான்.

காந்திக்கு அச்சிறுமியைப் பார்த்தவுடன் தன்னைப் போலவே இன்னும் ஒரு ஜீவன் துன்பப்படுகிறது எனத் தோன்றியது. அன்த சிறுமியின் நிலையைப் பார்த்தும் காந்தியின் நினைவுகள் தன் பழையை வாழ்க்கையை நோக்கிச் சென்றது.

காந்தியும் தன் குடும்பத்தோடு சந்தோசமாகக் தான் வாழ்ந்து வந்தாள். அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, அம்மா வழித்தாத்தா, பாட்டி என அனைத்து உறவுகளுமே அவளுடன் இருந்தனர்.

காந்தி தான் அவனது வீட்டில் கடைக் குட்டி எப்போதுமே அவள் அப்பாவுடைய செல்லப் பிள்ளை. வேலை விட்டு ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும் போது அவளுக்காக ஏதாவது ஒன்று வாங்கிக் கொன்டே வருவார்.

காந்தி தனது குடும்பத்தை பலி கொடுப்பதற்கு முதல் நாள் இரவு காந்தி, “அப்பா என்னை நாளைக்கு நீங்க வேலைக்கு வழியில் மாமா வீட்டிற்கு கொண்டு போய் விடுறீங்களா” என கேட்டாள்.

“ஏன் காந்தி நாளை உனக்கு லீவா என்ன?
“ஓம் அப்பா, அதனால்தான் நாளைக்கு அங்கு போகப் போகிறன், சரிதானே அப்பா.”
“என்னைக் கொண்டு போய் அங்க விடுவீங்க தானே?”
“ம்ம், சரி நரி கொண்டு போய் விடுகிறேன்”எனச் சொன்னார்.

அடுத்த நாள் காலை காந்தி, அவளது அப்பாவோடு மாமா வீட்டிற்குப் போனான்.
அங்கே போனதும், மாமா காந்தியைப் பார்தது “என்ன இன்றைக்கு லீவுதானே இங்கே இருந்து விளையாடு, நாளைக்கு மாமா உன்னை அங்கே வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன்” எனக் கூறிவிட்டு வேலைக்குச் சென்றார்.

சரி, மாமா எனத் தலையாட்டி விட்டே காந்தி துள்ளலுடன் தனது மாமாவின் பிள்ளைகளோடு விளையாடச் சொல்கிறாள்.

திடீரென்று எங்கோ வெடிச் சத்தமும், ஷெல் சத்தமும் கேட்டது. வெளியில் விளையாடிக் கொண்டிருந்த காந்தியும், அவளது மாமா பிள்ளைகளும் அச்சத்தில் அப்படியே நின்றனர்.

சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாமி வெளியில் ஓடி வந்து பிள்ளைகள் ‘உள்ள எல்லாரும் வாங்க, வெளியே வெடிச் சந்தம் கேட்கிறது’ எனச் சத்தம் போட்டார்.

அனைவரும் பயத்தில் உள்ளே வந்து அமர்ந்து கொன்டனர். ஓவ்வொரு வெடிச்சத்தத்திற்கும் காந்தி பயந்து நடுங்கினாள். அந்தத் தருணம் தான் விளையாட வராமல் வீட்டிலேயே அம்மாவுடனே இருந்திருக்கலாமோ என ஓர் எண்ணம் தோன்றியது.

சிறிது நேரம் வெடிச்சத்தம் அடங்கிய பிறகு மாமா வேலை விட்டு வந்தார்.

அப்போது பக்கத்து வீட்டு ஆன் ஓடி வந்து மாமாவைப் பார்த்து,“மாணிக்கம், மாணிக்கம் இங்கே கொஞ்சம் வெளில வாங்களன்” என வேலிக்கு அப்பால் நின்று கத்தினார்.

மாமாவுடன், அந்த ஆளும் ஏதோ இரகசியமாக தங்களுக்குள் குசு குசுவெனப் பேசிக் கொன்டனர்.

பின்னர் உள்ளை வந்த மாமா காந்தியைப் பார்த்து “உக்கட வீட்டுக்கு பேற்று வருவோம் காந்தி”எனக் கூறினார்.

ஆனால் அவர் அவனை வீட்டக்கு கூட்டிப் போகும் வழியைத் தாண்டி சென்றார்.அப்போது அவரைப்பார்த்து, “நம் வீட்டுக்குப் போகும் வழி இதுதானே இதால போகாம நாம எங்க போறம் மாமா எனக் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் கூறவே இல்லை.

பிறகு பார்க்கும் போதுதான் விளங்கியது அவர் அவள் படிக்கும் பாடசாலைக்கு கூட்டிக் கொன்டு வந்துள்ளார் என்பது. அங்கே குழுமியிருந்த சனக் கூட்டத்தைப் பார்த்தவுடன் அவரின் கையைப் பிடித்துக் கொன்டே உள்ளே சென்றாள்.

அங்கே உள்ள ஒரு பெரிய மண்டபத்தில் நிறைய சடலங்கள் கிடந்தன. எல்லாhமே வெள்ளைத் துணியால் மூடப் பட்டிருந்தன.

மாமாவோ அவனைத் தள்ளி அருகிலிருந்த சடலத்தை நோக்கிச் சென்றார்.

அப்போது அங்கு சடலம் ஒன்றின் மீது போர்த்தப்பட்டிருந்த ஓர் வெள்ளைத் துணி காற்றினால் விலக்கப்பட்டது. அதில் தெரிந்த முகம் அவளது அன்பக்குரிய அப்பா.

அவளது குடும்ப அங்கத்தவர்கள் அனைவருமே ஷெல் வீச்சினால் சின்னா பின்னமாகி விட்டனர். அப்போதுதான் தனக்கு யாருமே இல்லை என அவளது மனதில் ஓர் எண்ணம் உதயமாகியது. தனது குடுபத்தை புதைப்பதற்காக தூக்கிச் செல்வதை பார்த்த படியே உறைந்து போய் நின்றாள்.

எல்லாம் முடிந்ததும் மாமா அவளை வீட்டுக்கு கூட்டிச் சென்று விட்டார்.
மாமா காந்தியையும் அவரது பிள்ளைகளையும் ஒன்றாகவே வளர்த்தார். பணச் சிக்கல் இருந்தது. அதை அவர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

அச்சமயத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த அவளது தந்;தை வழிப் பாட்டியார், அவளது மாமா எவ்வளவு கெஞ்சியும் கேளாமல் “அவளை நானே பார்ப்பேன், நன்றாக படிக்க வைக்க வேன்டும், உங்களது நிதி நிலையையால் எனது பேத்தியின் வாழ்வு பாழாவிடும்”எனக் கூறி வீண் சச்சரவு செய்து, காந்தியை பிரித்துக் கொன்டு போய் அந்த விடுதியில் சேர்த்து விட்டார். இப்போது காந்தி உறவுகள் இருந்தும் இல்லாமலே ஓர் நிர்கதியான நிலையில் உள்ளாள்.

தன்னைப் பற்றிய சிந்தனைப் பற்றிய சிந்தனையில் உழன்று கொன்டிருந்த காந்தி மெதுவாக புதிதாக வந்திருந்த அச்சிறுமியை நோக்கிச் சென்றாள். “அழாத இனிமே இங்கதான் இருக்கும் நிலை உனக்;கு வந்து விட்டது, நானும் உன்னைப் போல தான்;,நாம் இருவருமே இனிமேல் நல்ல நண்பர்களாக அவளது கண்களைப் துடைத்து விட்டாள்.

நாள் செல்ல இருவருமே நல்ல நண்பிகளாயினர். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் இருந்தனர். காந்தியின் மாமா இடைக்கிடையே விடுதிக்கு வந்து அவனைப் பார்த்து விட்டுச் செல்வார்.
இப்படியே காலங்கள் உருண்டோடின. காந்தி தனது கல்வியில் அதீத கவனம் செலுத்தினாள். உயர்தரம் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தேர்வானாள்.

அங்கிருக்கும் பிள்ளைகளை காந்தி கவனித்துக் கொள்வாள். அவர்களுக்கு படிப்பின் உதவி செய்வாள்;. அவர்களைப் பார்த்து “நானும் உங்களைப் போல இந்த விடுதிக்கு வந்த ஒருத்திதான். ஆரம்பத்தில் எனக்கு மிகவும் கஷ்டமாகத்தான இருந்தது. நாளாக நாளாக என்னை நானே இந்த சூழ்நிலைக் கேற்றவாறு மனதை திடப்படுத்திக் கொண்டேன். அதைப்போலவே நீங்களும் என்னை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு நீங்களும் வாழும் நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள பழகுங்கள். அவ்வாறு நேர்ந்தால் நாம் எதையும் சமாளிக்கும் நிலைமைக்கு வருவோம். வாழ்வில் சிறந்த இலக்கை அடையலாம்”எனக் கூறுவாள்.

வருடங்கள் கழித்தன, அங்கிருந்தே பல்கலைக்கழத்திற்கு சென்று படித்து முடித்து விட்டு, இன்று ஓர் ஆசிரியையாகத் திகழ்கிறாள். தன்னால் ஆன மட்டும் விடுதியில் உள்ள அனைவருக்கும் உதவி செய்து வருகிறாள். அவனைப் போல அருக்கும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளாள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s