மீண்டும் தொலைந்த வாழ்வு….. by M. Lakshiya

அலுவகத்தில் மதிய இடைவேளை நேரம். அனைவரும் உணவு உண்பதற்க்காக சிற்றுண்டிச் சாலைக்கச் சென்றனர். அங்கே மிகவும் கம்பீரமான உடலமைப்புடனும் முகத்தில் சிறு புன்னகையுடனும் இருந்த ராஜிவை, குமார் சாப்பிடுவோமா? என்று கேட்டான். சாப்பிட்டுக்கொன்டிருக்கையில் உன்னுடைய காதல் விவகாரம் எவ்வாறு போய்க்கொண்டிருக்கின்றது என்று குமார் கேட்டான். நாளை அவளின் வீட்டுக்கும் போறேன். நான் எனது கனவுத் தேவதையைப் பார்பதற்கு ஆவலாக உள்ளேன் என்று ராஜிவ் கூறினான். சரி ராஜிவ் இடைவேளை நேரம் முடியபோகிறது நாளைக்கும் பார்ப்போம் என்று கூறிவிட்டு குமார் அலுவகத்தை நோக்கி நகர்ந்தான்.

மாலை ஐந்து மனியானதும் ராஜிவ் வீடு நோக்கிப் புறப்பட்டான். வீட்டை அடைந்ததும் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. ஆம், அது அவனுடைய காதலியே. ஹலோ ராஜிவ், ஹலோ சொல்லும்மா, என்ன செய்கிறாய் என ராஜிவ் கேட்டான். நல்லா இருக்கன். உங்களையே நினைத்துக் கொண்டும் உங்களை நாளை முதன் முதலில் பார்க்கப்போவதை எண்ணுகையில் என்னுடைய மனம் அலைபாய்கிறது. சரி நீங்க எத்தனை மணிக்கு வீட்ட வருவீங்க என்றதும் நாளை மதியம் ஒரு மனி போல வருவதாக கூறிவிட்டு ராஜிவ் அழைப்பை துண்டித்துவிட்டு ஓய்வு எடுத்தான்.

இரவு உணவை உண்டுவிட்டு படுக்கைக்குச் சென்ற ராஜிவ் தனது காதல் நினைவுகளை மீட்டிப்பார்த்தான். அன்றொரு நாள் இன்டர்வியூக்கு சென்ற ராஜிவ் களைப்பினால் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு அருகில் இருந்த பழக்கடையில் பழச்சாறு உண்டுவிட்டு திரும்பிப் பார்த்த போது பஸ்ஸைக்காணாது பதறினான். பஸ்ஸில் அனைத்து ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய விடயங்கள் அடங்கிய பையைத் தவறவிட்டான். இதனால் மிகுந்த கவலையுடன் வீட்டுக்கு சென்ற ராஜிவ் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் என்னுடைய வாழ்க்கையே பாழாகிவிடும் என எண்ணி வருந்தினார்.

முன்று நாட்களுக்கு பிறகு தபால்காரன் ஒரு பொதியைக் கொன்டு வந்தான். பிரிந்துக் பார்த்ததும் ரரிஜவ் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். ஆம் அது அவன் பஸ்ஸில் தவறவிட்ட பை அந்தப் பையில் ஒரு கடிதமும் இருந்தது. “உங்களுடைய பையை எனது எனது அப்பாவின் பஸ்ஸிலே தவறவிட்டுள்ளீர்கள். அந்த பையில் இருந்த கடித உறை ஒன்றில் உங்கள் முகவரி இருப்பதைப் பார்த்த என்னால் அனுப்பமுடிந்தது. இனிமேலும் இவ்வாறான விடயங்கள் அக்கறையுடனும் அவதானத்துடனும் வைத்திருக்கவும்.” என எழுதப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த ரரிஜவ் அந்த அக்கறையுள்ளவருக்கு பதில் கடிதம் எழுத வேன்டும் என நினைத்து “உங்களுக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய வாழக்கையே தொலைந்துவிட்டது போன்று இருந்த எனக்கு என் வாழ்வு மீண்டும் மலர உதவிய உங்களை என் வாழ்வில் மறக்கவே மாட்டேன். உங்களுடைய பெயரை அறிய ஆவலாக உள்ளேன்” என பதில் கடிதம் எழுதி அனுப்புகிறான்.

இரன்டு நாட்கள் கழித்து மீன்டும் தபால் வந்தது. கடிதத்தைப் பார்த்த ராஜிவ் மிக்க ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினான். “எப்படி இருக்கீங்க, எனது பெயரை அறிய ஆவலாக உள்ளீங்க போல இருக்கு… என்ற பெயர் சுமி” என எழுதபட்டிருந்தது. கடிதத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய வேலைக்களைப் பார்க்கத் தொடர்கினான் ராஜிவ். இருந்தாலும் சுமியை நேரில பார்க்க வேன்டும் என ராஜிவின் மனம் என்னியது. இதனை சுமியிடம் கேட்பதற்கு தயக்கமாக இருந்தபடியால் அதனைக் கேட்காமலேயே விட்டுவிட்டான்.

இரன்டு நாட்கள் கழிந்த பிறகு புது இலக்கத்தில் இருந்து அழைப்பு ஒன்று ராஜிவிக்கு வந்தது. “ஹலோ” என்றதும் சிறிது நேரம் மௌனமாக இருந்தது பின்னர் “ஹலோ நான் யாரு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று இனிமையான குரலில் கூற குழப்பமடைந்த ராஜிவ் மன்னிச்சிருங்க தவறான அழைப்பு வர மறுபடியும் துண்டித்து விட்டு தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான். சிறிது நேரத்தில் “நான் சுமி” என ஒரு குறுஞ்செய்தி வந்தது. உடனே ராஜிவ் அழைப்பை மேற்கொன்டு ஹலோ என்றதும் மறுமுனையில் இருந்தது பதில் ஏதும் வரவில்லை. சிறிது நேரத்தின் பின் வெட்கம் கலந்த தொனியுடன் ஹலோ என பதில் வந்தது. என்னுடைய தொலைபேசி இலக்கம் எவ்வாறு உங்களிடம் என்று ராஜிவ் கேட்க உங்களிடம் என்று ராஜிவ் கேட்க உங்களுடைய விபரத்தரவுகளில் இருந்து பெற்றுக் கொண்டேன் என சுமி கூறினாள். இவ்வாறு தொடங்கிய உரையாடல் காதலாகி இன்று மனதால் ஒருவரை ஒருவர் கணவன் மனைவி போல எண்ணி இருவரும் வாழ்வதை ராஜிவ் நினைத்துக் கொன்டு நாளை ஒரு மணிக்கு சுமியின் வீட்டுக்குச் சென்று தனது காதல் தேவதையைதக் கண்டு அவளின் வீட்டாருடன கலந்து பேசி விரைவில் அவளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய வேன்டும் என்று எண்ணியயுடயே நித்திரையாகிவிட்டான்.

அதிகாலை எழுந்து விட்டு வேலைக்களைச் செய்துவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான் ராஜிவ் அலுவலகத்தில் முகாமையாளர் பத்து மணிபோல காசு பெறுவதர்காக வேறு பல நிருவனங்களுக்கு ராஜிவ்வை இடிமுழக்கத்துடன் கனமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அம்மழை விட மூன்று மணியாகிவிட்டது. மழை விட்டதும் சுமியின் வீட்டை நோக்கிப் புறப்பட்ட ராஜிவ் அவளின் வீட்டை அடைந்ததும் அங்கே பல மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதைப் பார்த்து விசாரித்தான். “யாரோ இந்த வீட்டுப் பெண்னை பெண் பார்ப்பதற்காக வருவதாக கூறினார்களாம். அந்த ஆர்வத்தினாள் உருவன். இதனைக் கேட்ட ராஜிவ் பதரியடித்து ஓடிப்போய் உருக்குலைந்து கிடந்த தனது கனவுத் தேவதையின் உடலைப் பார்த்து ஓ……… ஒ……..” என கதறினான். இவனது அலறலைக் கேட்ட வானமும் கண்ணீர் சிந்தத் தொடங்கியது.

Leave a comment